மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களின் மார்ச் மாத சம்பளம் 60% குறைப்பு.. அரசு ஊழியர்களுக்கும் 50% கட்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு மார்ச் மாத சம்பளம் 60% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா தான். அங்கு இதுவரை 248 பேர் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

60% cut in March salaries of public representatives in Maharashtra

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு ஒரு பக்கம் என்றால் மக்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் அரசு போதிய நிதி இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்கள், சட்ட மேலவை பிரநிதிகள் மற்றும் மாநில முதல்வர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மார்ச் மாத சம்பளம் 60% குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் தெரிவித்தார்.

இதேபோல் அவர் மேலும் கூறுகையில், மகாராஷ்டிராவில் கிரேட் ஏ, கிரேட் பி அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 50% சம்பளம் குறைக்கப்டுகிறது. மகாராஷ்டிராவில் சி கிரேட் அரசு ஊழியர்களுக்கு 25 சதவீதம் சம்பளம் குறைக்கப்படுகிறது. டி கிரேட் அரசு ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் குறைக்கப்படாது என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Maharashtra Deputy CM and state Finance minister Ajit Pawar has issued orders that salaries of all elected representatives, including CM and all MLAs-MLCs, will be cut by 60% for the month of March.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X