மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெட் அலர்ட், அதிதீவிர கனமழை, நிலச்சரிவு.. மகாராஷ்டிர வெள்ளத்தில் தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.. ஷாக்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பால் 76 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல முக்கிய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு நீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு

மகாராஷ்டிர வெள்ளம்

மகாராஷ்டிர வெள்ளம்

மகாராஷ்டிராவில் கொங்கன் மண்டலம் என்று அழைக்கப்படும் ஏழு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு

நிலச்சரிவு

குறிப்பாக இந்த கனமழையால் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

76 பேர் பலி

76 பேர் பலி

இந்த கனமழையால் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் குறைந்தபட்சம் 76 பேர் பலியாகியிருக்கலாம் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 54 கிராமங்கள் முழுவமதுமாகவும், 821 கிராமங்கள் மோசமான பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து சுமார் 90 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது கடந்த 2019இல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை விட மோசம் ஆகும்.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

அங்குள்ள 6 மாவட்டங்களுக்குக் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, மீட்புப் பணிகளையும் நிவாரண பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Maharashtra flood At least 76 people have died. Red alert issued for six states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X