மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா அமைச்சராகும் போது உணர்ச்சி வசப்பட்ட காங்.எம்எல்ஏ.. கண்டித்த ஆளுநர்.. 2 முறை பதவியேற்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு வைபவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் இரண்டு முறை பதவி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் அவர் உணர்ச்சி மிகுதியில் பேசிய கூடுதல் வார்த்தைகள் தான்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சுமார் 36 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

ஷரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். கடந்த மாதம், அவர் பாஜகவுடன் பக்கபலமாக இருந்து தேவேந்திர ஃபட்னவிஸ் உடன் துணை முதல்வரானார். .

முறியடித்தார்

முறியடித்தார்

ஆனால், உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனைக்கு உத்தரவிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் பதவி விலகினார், அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவின் 80 மணி நேர முயற்சியை இதன் மூலம் அஜித் பவார். சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

கே.சி.பத்வி

கே.சி.பத்வி

இந்நிலையில் இன்று உத்தவ் அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவான கே.சி. பத்வி (61 வயது) அமைச்சராக பதவி ஏற்ற போது உணர்ச்சி வசப்பட்டதால் ஆளுநர் பகத் சிங், கண்டித்தார்.

வாக்காளர்களுக்கு நன்றி

வாக்காளர்களுக்கு நன்றி

காங்கிரசின் கே.சி.பத்வி, சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் சொல்வதை மட்டும் திருப்பி சொல்லாமல் கூடுதலாக சில வாக்கியங்களை பேசினார். தனது தொகுதி மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

மீண்டும் பதவி பிரமாணம்

மீண்டும் பதவி பிரமாணம்

இதை கண்டித்த ஆளுநர் "நெறிமுறைக்கு எதிரானது" என்று கூறியதுடன், பதவி பிரமாண வரிகளை தான் சொல்வதை மட்டும் சொல்ல வேண்டும் என்றும் கண்டித்தார். இதையடுத்து கே.சி.பத்வியை சுற்றியிருந்த மூத்த தலைவர்கள் அவரை நெறிமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியதால் மீண்டும் சத்திய பிரமாணம் எடுத்து அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

English summary
A Congress MLA KC Padvi Was Made To Take Oath Again in Maharashtra , because Padvi added a few extra sentences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X