கல்யாணம் ஆகி 4 மாசமாச்சு! அவரு ’சரியில்லை’..! காவல்நிலையத்தில் கதறிய இளம்பெண்! இந்த பிரச்சினை வேறயா?
மும்பை : திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் ஒரு முறை கூட கணவர் தன்னை தொடவில்லை எனவும், தனக்கு பல நோய்கள் இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்ததோடு, வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புதுமணம் பெண் புகார் அளித்துள்ளார்.
இந்தூர் நேரு நகரில் வசிக்கும் புதுமண தம்பதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆனது முதல் கணவரான இளைஞர் தனது மனைவியை அருகேயே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏழுமலையானை தரிசிக்க 7 கிமீ தூரத்துக்கு கியூ..48 மணி நேரம் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்
தொடர்ந்து திருமணம் நடந்த கையோடு புதுமண தம்பதியினர் தேனிலவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கும் மனைவி தன்னருகே அனுமதிக்காத அந்த இளைஞர். மேலும் திருமணம் முடிந்து பல ஆண்டுகளாகியும் கணவன் மனைவிக்கு இடையே எந்த விதமான உடல் ரீதியான உறவு ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

புது மணப்பெண்
இதனிடையே புதுமணப்பெண் தனது ஆண்மையற்ற கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமை புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவருக்கு கடுமையான நோய்கள் இருப்பதாகவும், நோய்களை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். தேனிலவில் கூட தனது கணவர் என்னுடன் உடல் உறவில் ஈடுபடவில்லை.

பரபரப்பு புகார்
திருமணத்திற்கு முன்பு, எனது குடும்பத்தினரிடம் வலுக்கட்டாயமாக ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டது என்றும் அவர் பரபரப்பு புகாரை அளித்துள்ளர். இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் பூபேந்திர பவாஸ்கர், மாமியார் ஷில்பா, மைத்துனர் மேக்னா மற்றும் நந்தோய் நிகில் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை வழக்கினை போலீசார் பதிவு செய்துள்ளதாக காவல்நிலைய அதிகாரி ஜோதி சர்மா தெரிவித்தார். மும்பையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனக்கு திருமணம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இளம்பெண் கதறல்
மேலும், வரதட்சணை பேராசை கொண்ட மாமியார் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு ரூ.5 லட்சமும், 50 சவரண் தங்க நகைகளையும் கேட்டுள்ளனர். திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து பணம் மற்றும் தங்கம் வழங்கினர். அதன் பிறகு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மும்பையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

கணவருக்கு ஆண்மைக் குறைவு
சுமார் ஒரு வாரம் அங்கேயே இருந்தார். கணவர் பூபேந்திராவுக்கும் அந்த பெண்ணுக்கும் எவ்வித தொடர்பும் ஏற்படவில்லை. பின்னர் தேனிலவுக்கு சென்றபோதும் கணவர் என்னை விட்டு விலகி இருந்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, தனக்கு பல நோய்கள் இருப்பதாக கணவர் கூறினார். நான் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள என் மாமியார் வீட்டிற்கு திரும்பினேன். அங்கும் வந்த அவர் ரூ.10 லட்சம் கேட்டு தகராறு செய்தனர். இந்தூர் வந்து எனது குடும்பத்திடம் எல்லாம் சொல்லி வழக்குப் பதிவு செய்துள்ளேன்: என அப்பெண் கூறியுள்ளார்.