மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காருக்குள் டிரைவரோடு சேர்ந்து 2 பேர்.. லாக் செய்யப்பட்டது கதவு.. 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த அவஸ்தை

Google Oneindia Tamil News

Recommended Video

    9 மாத கர்ப்பிணியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன்!

    மும்பை: 6 மாத கர்ப்பிணி பெண் தனது 12 நிமிட ஊபர் கார் பயணத்தில் டிரைவர் மற்றும் அவருடன் வந்த நபரால் கடும் வேதனையை அனுபவித்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

    மும்பை விக்ரோலி பகுதியிலுள்ள கோத்ரேஜ் காலனியை சேர்ந்தவர், பிரேரனா மிஷ்ரா (31). ஐடி இன்ஜினியரான இவர், 6 மாத கர்ப்பிணியாகும். வேலைக்கு தினமும் ஆபீஸ் செல்லும் பிரேரனா, அங்கேயிருந்து கேப் புக் செய்து வீடு திரும்புவது வாடிக்கையாக இருந்துள்ளது.

    கடந்த திங்கள்கிழமையும், இப்படித்தான், மாலையில், ஊபர் மூலமாக டாக்ஸி புக் செய்துள்ளார். 10 நிமிடத்தில் டாக்சியும் வந்துள்ளது. ஆனால், அப்புறம்தான், விஷயம் விபரீதமாகியுள்ளது.

    நியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி!நியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி!

    கூடுதலாக ஒரு ஆண்

    கூடுதலாக ஒரு ஆண்

    பிரேரனா, அந்த காரில் ஏறி உட்காரும்போதே, டிரைவருடன் மற்றொரு நடுத்தர வயதுள்ள ஆணும் முன்சீட்டில் ஏறி உட்கார்ந்துள்ளார். இதை பார்த்ததும், பிரேரனாவுக்கு தூக்கிவாரிப் போட்டுள்ளது. நாடு இருக்குற நிலைமையில், இப்படியான கூடுதல் நபர்களை ஏற்றினால் அடுத்து என்ன நடக்குமோ, எங்கே அழைத்து செல்வார்களோ என்றெல்லாம், பிரேரனா மனக்கண்ணில் தோன்றியுள்ளது.

    டிரைவரிடம் கேள்வி

    டிரைவரிடம் கேள்வி

    எனவே, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, டிரைவரை பார்த்து, எதற்காக கூடுதலாக ஒரு ஆளை ஏற்றினீர்கள்? நான் ஷேர் செய்யும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவில்லையே. எனக்கு மட்டும்தானே கேப் புக் செய்தேன் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டிரைவர், என்கூட வருபவரும் ஒரு டிரைவர்தான், நீங்க பயப்படாதீங்க என்று சொன்னாராம்.

    பீதியூட்டிய கிசுகிசு பேச்சு

    பீதியூட்டிய கிசுகிசு பேச்சு

    ஆனால், டிரைவரும், அவருடன் இருந்த நபரும், கிசுகிசுவென பேசியதால், பிரேரனாவுக்கு பீதி அதிகமாகிவிட்டதாம். "தயவு செய்து, அவரை இறக்கிவிடுங்க. இல்லை என்றால், என்னையாவது இறக்கிவிடுங்க. ப்ளீஸ்" என டிரைவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், டிரைவரோ, உங்க வீடு மொத்தமே 10 நிமிஷத்தில் வந்துவிடப்போகிறது. அதற்கு போய் ஏன் இப்படி அலட்டுறீங்க. சும்மா இருங்க என சொல்லிவிட்டாராம்.

    டோர் சைல்ட் லாக்

    டோர் சைல்ட் லாக்

    இதையடுத்து பயந்து போன பிரேரனா போனில் தனது கணவருக்கு தகவல் சொல்லியுள்ளார். மேலும் சிக்னல் நிறுத்தத்தில், காரை விட்டு இறங்க எத்தனித்துள்ளார். ஆனால் அங்குதான் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கார் சைல்ட் லாக் செய்யப்பட்டிருந்ததாம். இதனால் டிரைவர் ஒத்துழைப்பு இல்லாமல் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒருகட்டத்தில், பிரேரனா வீட்டுக்கே கார் சென்று சேர்ந்துவிட்டது.

    டுவிட்டரில் குமுறல்

    டுவிட்டரில் குமுறல்

    ஆனால், காலனியின் வாசலில் பாதுகாவலர் இருப்பதை பார்த்ததும், முன்கூட்டியே, டிரைவர் பக்கம் இருந்த நபர் கீழே இறங்கிவிட்டாராம். மேலும், பாய் மேடம் என பிரேரனாவை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஒருவழியாக, வீட்டுக்கு அருகே காரிலிருந்து இறங்கிய பிறகுதான், பிரேரனாவுக்கு நிம்மதி பெருமூச்சு வந்துள்ளது. இதுகுறித்து பிரேரனாவின் நாத்தனார் இதுபற்றி ட்விட்டரில் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

    விதிமுறை மீறல்

    விதிமுறை மீறல்

    இதுதொடர்பாக உபர் செய்தித்தொடர்பாளரை நிருபர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அவர் கூறுகையில், இந்த சம்பவம் உண்மையாக இருந்தால், அது எங்களது விதிமுறைகளுக்கு எதிரான செயல்தான். கூடுதலாக ஒரு நபரை டிரைவர் அழைத்து சென்றிருக்க கூடாது. இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

    English summary
    A pregnant woman suffers while travel by uber when the driver did not stop the car and continued to ride, in Mumbai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X