மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காளியை தேடி 300 கிமீ நெடும் பயணம்.. மகாராஷ்டிரா to கர்நாடகா.. நடந்தே சென்ற புலி.. சுவாரசிய காரணம்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த புலி ஒன்று 300 கிமீ நடந்தே கர்நாடகா வரை வந்து இருக்கிறது. பல காடுகள், மலைகள் தாண்டி இந்த புலி பயணம் மேற்கொண்டுள்ளது.

Recommended Video

    Maharastra Tiger travelled 330 km to Kali Forest

    பொதுவாக விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே பயணிக்காது.அப்படியே பயணித்தால் கூட கூட்டம் கூட்டமாகவே பயணம் மேற்கொள்ளும். அதிலும் யானைகள் கூட்டம் கூட்டமாக புதிய வாழ்விடம் நோக்கி செல்லும்.

    ஆனால் புலிகள் எப்போதும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல அதிகம் யோசிக்கும். அரிதான காரணம் இருந்தால் மட்டுமே புலிகள் தங்கள் கோட்டையை விட்டு வெளியே செல்லும்.

    சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும் சத்தமே இன்றி சாதித்த சென்னை.. மும்பை, பெங்களூர், டெல்லிக்கு வழிகாட்டியாகும்

    மகாராஷ்டிராவில் என்ன

    மகாராஷ்டிராவில் என்ன

    இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவை சேர்ந்த புலி ஒன்று 300 கிமீ நடந்தே கர்நாடகா வரை வந்து இருக்கிறது. பல காடுகள், மலைகள் தாண்டி இந்த புலி பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த புலி மகாராஷ்டிராவில் இருக்கும் சாந்தோலி தேசிய பூங்கா அருகே இருக்கும் சாஹயாத்திரி புலிகள் ரிசர்வ் காட்டு பகுதியில் வசித்து வந்தது. கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இது மகாராஷ்டிராவில் இருந்தது.

    2018ல் எடுக்கப்பட்டது

    2018ல் எடுக்கப்பட்டது

    அந்த புகைப்படம் 2018ல் எடுக்கப்பட்டது. ஆனால் அதன்பின் மகாராஷ்டிரா காட்டுப்பகுதியில் காணப்படவில்லை.
    இரண்டு வருடங்களாக இந்த புலி மகாராஷ்டிரா காட்டு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கேமராக்கள் எதிலும் சிக்கவில்லை. விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வைக்கப்பட்டு இருக்கும் எந்த கேமராவிலும் இந்த குறிப்பிட்ட புலி மட்டும் சிக்கவே இல்லை.

    சர்ப்ரைஸ் கொடுத்தது

    சர்ப்ரைஸ் கொடுத்தது

    இதனால் அது பலியாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2020 ஜூலை மாதம் திடீர் என்று இந்த புலி கர்நாடகாவில் இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தது. மகாராஷ்டிராவில் தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடகாவில் இருக்கும் காளி காட்டு பகுதிக்கு வந்தது. காளி காட்டு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கேமரா ஒன்றின் மூலம் இந்த புலி கர்நாடகாவிற்கு இடம்மாறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    நடந்து வந்து இருக்கிறது

    நடந்து வந்து இருக்கிறது

    இந்த புலி மொத்தம் 300 கிமீ தூரம் நடந்து இடம்மாறி உள்ளது.குறைந்தது ஒரு வருடம் இந்த புலி பொறுமையாக நடந்து இருக்கலாம். இடையில் இருக்கும் காடுகளில் இந்த புலி ஓய்வு எடுத்து இருக்கலாம். பல்வேறு காட்டு விலங்குகளை தாண்டி இருக்கலாம் அல்லது சில இடங்களில் நெடுஞ்சாலைகளிலும் நடந்து சென்று இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது ஆண் புலியாகும்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்த புலி காளி காட்டிற்கு வர முக்கிய காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் இருக்கும் காளி காட்டுப்பகுதி தற்போது புலிகளை அதிகம் கவரும் காட்டுப்பகுதியாக மாறியுள்ளது. முக்கியமாக கோவா, மகாராஷ்டிரா, கேரளா புலிகள் இங்கே அதிகம் வருகிறது. இந்த வனப்பகுதியின் வெப்பநிலை நன்றாக இருப்பதால் புலிகள் இங்கே வருகிறது.

    காளி காடு

    காளி காடு

    இந்த காளி காட்டுப்பகுதியை நோக்கி இரண்டு வருடமாக நிறைய புலிகள் வந்துள்ளது. 25 புலிகள் இரண்டு வருடத்தில் இங்கே இடம்பெயர்ந்து உள்ளது. இந்த காட்டுப்பகுதியில் ஒரு காலத்தில் வெறும் 4 புலிகள் இருந்தது. இப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் 30 புலிகள் உள்ளது. இந்த காட்டுப்பகுதி 1306 சதுர கிலோ மீட்டர் பரப்பை கொண்டது ஆகும்.

    English summary
    A tiger from Maharashtra traveled 300 km by foot to reach Kali forest in Karnataka in less than 2 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X