மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா- கடந்த 10 நாட்களில் அரங்கேறிய போர்க்கொடி கலகங்கள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகால சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மொத்தம் 48 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
Maharashtra முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக Uddhav Thackeray அறிவிப்பு *Politics
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த ஜுன் 20 முதல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

June 2022
- Jun 29உச்சநீதிமன்றம் மறுப்பும் ராஜினாமாவும்மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதற்காக நாளை மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்தார். ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடர்ந்தது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடத்த தடை கோரியது சிவசேனா. ஆனால் உச்சநீதிமன்றம், சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்தது. உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்ட உடனேயே சமூகவலைதளங்களில் பேசிய உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
- Jun 28பட்னாவிஸ் சந்திப்புஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ் சந்திப்பு; உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என பட்னாவிஸ் வலியுறுத்தல்
- Jun 27தடை விதிப்புஜூலை 11 வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
- Jun 26வழக்குதுணை சபாநாயகர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்ததை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு; 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
- Jun 24தகுதி நீக்கம்அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம். பாஜக ஆதரவு 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள், துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம். இந்த தீர்மானத்துக்கு 34 சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஆதரவு; ஆனால் பெயர் குறிப்பிடாத மின்னஞ்சலில் இருந்து வந்ததால் இதனை நிராகரித்தார் துணை சபாநாயகர்.
- Jun 23தலைவரான ஷிண்டேஜூன் 23: ஏக்நாத் ஷிண்டே சட்டசபை கட்சித் தலைவராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 37 பேர் தேர்ந்தெடுத்தனர்.
- Jun 22அஸ்ஸாம் பயணம்குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 40 எம்.எல்.ஏக்களுடன் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அஸ்ஸாம் சென்றார் ஏக்நாத் ஷிண்டே. தமக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசிய உத்தவ் தாக்கரே, தாம் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்; என்னுடைய ராஜினாமா கடிதம் ரெடியாக உள்ளது என அறிவித்தார். அத்துடன் மும்பையில் முதல்வர் இல்லத்தை காலி செய்துவிட்டு தமது சொந்த வீட்டுக்கும் திரும்பினார் உத்தவ் தாக்கரே. சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக பின்னணியில் இருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
- Jun 21ஆப்சென்ட்ஜூன் 21: முதல்வர் உத்தவ் தாக்கரே நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 12 சிவசேனா எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனையடுத்து சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டார். ஏக்நாத் ஷிண்டேவோ, தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸுடனான உறவை முறித்து கொண்டு கூட்டணி அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- Jun 20தலைமறைவுமகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தல் முடிவடைந்த உடன் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. ஏக்நாத் ஷிண்டேவுடன் 11 சிவசேனா எம்.எல்.ஏக்களும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
Comments
மகாராஷ்டிரா அரசியல் floo test assembly maharashtra political crisis devendra fadnavis sanjay raut maharashtra shiv sena ncp congress bjp coronavirus covid19 vaccine amit shah bhagat sin politics
English summary
Here is a timeline of Maharashtra political crisis from June 20.