மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாவோயிஸ்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய கொடூர தாக்குதல்கள்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 16 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்திருப்பது நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் என பல மாநிலங்கள் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வந்தன. ஆனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து இம்மாநிலங்கள் மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன.

a timeline of maoists attacks across nation over the past-10 years

இதனால் மாவோயிஸ்டுகளின் வலிமை குறைந்துவிட்டது. இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்புப் படையினர ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்களது பகுதிகளில் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது தாக்குதல்களையும் மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர். அத்தகைய தாக்குதல்களில் ஒன்றுதான் கட்ச்ரோலி நடவடிக்கை.

16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான் 16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான்

கடந்த 10 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய பிரதான தாக்குதல்கள்:

  • 2008 ஜூன் 29: ஒடிஷாவின் பாலிமேலா தாக்குதலில் 38 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
  • 2008 ஜூலை 16: ஒடிஷா மல்காங்கிரி மாவட்டத்தில் கண்ணிவெடி தாக்குதலில் 21 போலீசார் மரணித்தனர்.
  • 2009 மே 22: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி தாக்குதலில் 16 போலீசார் பலியாகினர்.
  • 2009 செப்டம்பர் 26: ஒடிஷாவில் பாஜக எம்.பி. மகன் பாலிராம் காஷ்யப் படுகொலை செய்யப்பட்டார்
  • 2009 அக்டோபர் 8: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர உயிரிழந்தனர்.
  • 2010 பிப்ரவரி 15: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் தாக்குதலில் 24 பாதுகாப்புப் படையினர் பலி.
  • 2010 ஏப்ரல் 4: ஒடிஷாவின் கோராபுட் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.
  • 2010 ஏப்ரல் 6: சத்தீஸ்கரின் தண்டேவடா வனப்பகுதியில் 76 துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர். மாவோயிஸ்டுகளில் மிகப் பெரிய தாக்குதல்களில் இது ஒன்று.
  • 2013 மே 25: சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிஅஸ் தலைவர் நந்த் குமார் படேல், மாநில் முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2016 ஜூலை 19: பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.
  • 2017 ஏப்ரல் 23: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 300 மாவோயிஸ்டுகள் திரண்டு நடத்திய தாக்குதலில் 26 துணை ராணுவத்தினர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து இன்று மகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் மிகப் பெரிய த்ஆக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.

English summary
The deadly maoist attack took place on April 6, 2010, when a Chhatisgarh police official and 75 CRPF jawans were were killed in an ambush in Dantewada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X