மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி நல்லா படிக்கமாட்டாங்க என கருதக்கூடாது' மும்பை கோர்ட்டு

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கோர்ட்டு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வாட்டார் என கருதக்கூடாது என்று கூறியுள்ளது.

மகாரஷ்டிரா மாநிலம் மும்பையில் பெற்ற மகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அதிரடி தீர்ப்பு அளித்தது.

இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க மாட்டார் என்றோ சாதாரணமாக நடந்து கொள்ள மாட்டோர் என்றோ கருதக்கூடாது என தெரிவித்துள்ளது.

தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. உ.பியில் தொடரும் அவலம்! தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. உ.பியில் தொடரும் அவலம்!

கணவர் வரும்போதெல்லாம்..

கணவர் வரும்போதெல்லாம்..

சவுதி அரேபியாவில் உள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றிய மும்பையை சேர்ந்த நபர், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும் வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், கணவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை தாய் கவனித்துள்ளார். அதாவது தனியாக அறையில் போய் இருந்து கொள்வது, தாயிடமும் சரியாக பேசாதது என இருந்துள்ளார்.

மனம் வெதும்பிய சிறுமி

மனம் வெதும்பிய சிறுமி

ஒரு கட்டத்தில் தாயிடம் மனம் திறந்த சிறுமி, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி வெதும்பியுள்ளார். 10-வயது முதலே இந்த கொடூரத்தை அனுபவித்து வருவதாக தாயிடம் மனம் விட்டு அந்த சிறுமி கதறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உடனடியாக 2014 ஆம் ஆண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவரது குற்றமும் நிரூபணம் செய்யப்பட்டதையடுத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

 9 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான்

9 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான்

வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரின் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் கூறியதாவது:- புகார் பதிவு செய்ய காலதாமதம் ஆனதை காரணம் காட்ட முடியாது. ஏனெனில், பாதிக்கப்பட்டவர் சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளவில்லை. 9 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளோம் என்பதை சிறுமியால் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.

70 சதவீத மதிப்பெண்

70 சதவீத மதிப்பெண்

அதுபோக, குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் நபராக இருக்கும் தனது தந்தை ஜெயிலுக்கு சென்றால், வீட்டில் பண கஷ்டம் ஏற்படும் என சிறுமி நினைப்பதும் இயற்கையானதே. குறுக்கு விசாரணையின் போது அந்த சிறுமி பள்ளியில் சராசரியாக 70 சதவீத மதிபெண்களை வாங்கியுள்ளார் என்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு வழக்கம் போல் சென்று இருக்கிறார் என்றும்.. எனவே, பாலியல் குற்றச்சாட்டுகளுடன் பொருந்தும் வகையில் இந்த உண்மைகள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார்.

அதிக மதிப்பெண் பெறமாட்டார்..

அதிக மதிப்பெண் பெறமாட்டார்..

இதை நிராகரிக்கிறோம்.., பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்காது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அதிக மதிப்பெண் பெறமாட்டார் என கருத முடியாது'' என்று தெரிவித்துள்ளது.

English summary
The court sentenced the father who sexually assaulted his daughter to 10 years in jail in Mumbai and said that a woman who is a victim of sexual assault should not be considered as a candidate for getting good marks in the examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X