மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா? பாஜக மீது ஆதித்யா அட்டாக்

Google Oneindia Tamil News

மும்பை: ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தமிழர் வாழும் தாராவி கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்தி வென்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பஞ்சாயத்து ஓடுகிறது.

கொரோனா பரவல் தொடங்கிய போது மும்பை தாராவிதான் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளப் போகிறது என்கிற அச்சம் இருந்தது. தாராவிதான் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதி.

Aaditya Thackeray Speaks on RSS and Dharavi Model Controversy

இங்கு பல லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பே இல்லாத இந்த பகுதியில் கொரோனா கோரத்தாண்டவமாடியது.

ஆனால் மகாராஷ்டிரா அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் தீரமிக்க போராட்டத்தால் தாராவி காப்பாற்றப்பட்டுவிட்டது. தற்போது உலகின் கொரோனா தடுப்பு மாடல் பிரதேசமாக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாக தாராவி உருவெடுத்திருக்கிறது.

பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்

இங்குதான் பிரச்சனையே தொடங்குகிறது. தாராவியில் கொரோனாவை ஒழித்ததில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குதான் அதிக பங்கு இருக்கிறது என்கிறது பாஜக. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரிலேயே கொரோனா கோரதாண்டவமாடுகிறதே? அங்கே ஏன் தடுக்க முடியவில்லை? என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்வி.

மகாராஷ்டிரா அரசியலில் இதுதான் இப்போது ஹாட் டாபிக். இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வரின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளம்பரத்துக்காக இப்படி செய்யாது. பாஜகவினர்தான் இது போல் பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் இந்த சர்ச்சைக்குள் சிக்கவும் விரும்பவில்லை. மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது இயல்பானதுதான் என பட்டும் படாமலும் பதில் சொல்லி இருக்கிறார்.

English summary
Maharashtra Minister Aaditya Thackeray Speaks on RSS and Dharavi Model Controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X