மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    மும்பை: மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸில் சேருங்கள் என்றும் காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரத்தில் 105 இடங்களை பெற்ற பாஜக, 56 இடங்களை பெற்ற சிவசேனா, 54 இடங்களை பெற்ற தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களை பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    Aam Admis Preethi Sharma Menon says Congress should join with NCP

    இதனால் மகாராஷ்டிரத்தில் இழுபறி நிலவி வந்தது. இந்த நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தும் அக்கட்சி ஆட்சி அமைக்க இயலாது என கூறிவிட்டது. சிவசேனாவை அழைத்த நிலையில் அக்கட்சி ஆதரவு கடிதம் கொடுக்க கால அவகாசம் கேட்டது.

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்!மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்!

    அது போல் தேசியவாத காங்கிரஸை அழைத்தபோது அக்கட்சியும் 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலை மகாராஷ்டிர அரசியல் குறித்து ஆம் ஆத்மியின் பிரீத்தா சர்மா மேனன் கூறுகையில் எப்போதும் காங்கிரஸ் கட்சி தங்கள் நாட்டை விட கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    மக்களவை தேர்தலில் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்தனர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததால் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. இது போன்ற செயல்பாடு காங்கிரஸை அழித்துவிடும்.

    அக்கட்சி எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். இதுதான் காங்கிரஸ் அழிய சரியான தருணம் என பிரீத்தி சர்மா தெரிவித்துள்ளார்.

    English summary
    Aam Admi Party Preeti Sharma Menon says that Congress MLAs in Maharashtra should join @PawarSpeaks. It's really time for Congress to die.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X