மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்- அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்

Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    நடிகர் சஞ்சய் தத்துக்கு ஸ்டேஜ் 3 நுரையீரல் புற்றுநோய்.. அதிச்சியில் ரசிகர்கள்

    உலகை உலுக்கிய 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தும் சிறைவாசம் அனுபவித்தார். சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்காமலேயே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இது இன்னமும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

    Actor Sanjay Dutt diagnosed with lung cancer

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சஞ்சய் தத். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனைமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. ராணுவ மருத்துவமனை

    இதனிடையே சஞ்சய் தத் தமது ட்விட்டர் பக்கத்தில், சில மருத்துவ சிகிச்சைகளுக்காக ஓய்வு எடுக்கப் போகிறேன். என்னுடன் குடும்பத்தாரும் நண்பர்களும் இருக்கின்றனர். உடல்நிலை பற்றிய யூகங்கள் குறித்து நலம் விரும்பிகள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் அன்பால் நான் மீண்டும் வருவேன் என பதிவிட்டிருந்தார்.

    Actor Sanjay Dutt diagnosed with lung cancer

    தற்போது சஞ்சய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதாகவும் அதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.

    English summary
    According to the sources, Actor Sanjay Dutt diagnosed with lung cancer. He will fly to US for the Treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X