மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிட்டுக்குருவிகளின் காதலன் சுஷாந்த் சிங்...நிறைவேறாத கனவுகளுடன் மரணத்தை தழுவியது ஏன்

எந்த ஒரு மரணமும் ஏதாவது காரணத்தை கொண்டிருக்கும். ஆனால் சுசாந்த் சிங்கின் தற்கொலை ஏன் நிகழ்ந்தது எதற்காக நிகழ்ந்தது என்ற கேள்வி லட்சக்கணக்கானோரின் மனதில் எழுகிறது. கனவுகள் கண்டதோடு மட்டுமல்லாது அந்த கன

Google Oneindia Tamil News

மும்பை : ஒன்றல்ல இரண்டல்ல 50 கனவுகளை கண்ட இளம் நாயகன் சுசாந்த் சிங் தனது மரணத்தை தற்கொலை வடிவில் வரவழைத்துக்கொண்டதுதான் பெரும் சோகம். அழகு, அறிவு, புத்திசாலித்தனம் கொண்ட நாயகன் சுசாந்த் சிங் ராஜ்புத் பறவைகளின் காதலன் குறிப்பாக சிட்டுக்குருவிகளை நேசிப்பவர்.

Recommended Video

    சிட்டுக்குருவிகளின் காதலன் சுஷாந்த் சிங்...நிறைவேறாத கனவுகளுடன் மரணத்தை தழுவியது ஏன்

    நடிப்பது மட்டுமல்ல, படிப்பது, வானவியலில் ஆர்வம் என பன்முகத்திறமை கொண்ட இந்த இளம் நாயகனின் தற்கொலை முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரின் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் அது லட்சிய கனவு ஆனால் வானத்தில் பறப்பது தொடங்கி விவேகானந்தர் டாகு மெண்ட்ரி இயக்குவது, புத்தகம் எழுதுவது வனத்தில் தங்குவது என 50 கனவுகளை எழுதி வைத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வந்த இளம் நாயகன் சுசாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெறும் சோகம். நிறைவேறாத பாதி கனவுகளுடன் மரணத்தை தழுவியிருக்கிறார்.

    முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?

    பறவைகளோடு பறவையாய்

    பறவைகளோடு பறவையாய்

    பறந்து திரியும் சிட்டுக்குருவிகளுக்கு ஆசை ஆசையாக உணவு கொடுக்கும் சுசாந்த் சிங் பறவைகளோடு பறவையாக மாறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    வானில் பறந்த சுசாந்த்

    வானில் பறந்த சுசாந்த்

    தனது கனவுகளை எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார் சுசாந்த். அதில் முதல் கனவு பறக்க கற்றுக்கொள்வது. அதை நிறைவேற்றிய சந்தோசத்தில் பதிவிட்ட தருணம் இது. முதல் கனவு நிறைவேறியதில் அத்தனை சந்தோஷம்.

    disney land

    disney land

    டிஸ்னி லேண்ட் செல்ல வேண்டும் என்பது சுசாந்தின் 25வது கனவு அந்த கனவு நிறைவேறிய தருணத்தை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு கனவும் நிறைவேறும் போது அதை அடைந்த மகிழ்ச்சியை சுசாந்த் வெளிப்படுத்தும் விதமே அலாதியானது.

    கனவுகளும் நிஜங்களும்

    கனவுகளும் நிஜங்களும்

    சினிமா கனவுகளோடு பாலிவுட்டிற்குள் நுழைந்து பல ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த சுசாந்த் சிங் ராஜ்புத்திற்கு வியான்னா செல்ல வேண்டும். பல புதிய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும், ஐரோப்பா முழுக்க ரயிலில் வலம் வர வேண்டும், சுவாமி விவேகானந்தரின் டாக்குமென்ட்ரி எடுக்க வேண்டும் என பல ஆசைகள் இருந்தன.

    எரிமலையை படம் பிடிக்கும் கனவு

    எரிமலையை படம் பிடிக்கும் கனவு

    குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுத்தரவேண்டும். வில் வித்தையாளராக இருப்பது, புத்தகத்தை படிப்பது, சாம்பியனுடன் செஸ் விளையாடுவது, குதிரையேற்றம், கிரியா யோகா கற்றுக்கொள்வது உயிரோடு இருக்கும் எரிமலையை படம் பிடிக்க வேண்டும் என்பது கூட இவரது கனவுதான். புத்தகம் எழுதவேண்டும், கண் பார்வையற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது வேத ஜோதிடத்தை புரிந்து கொள்வது 6 மாதத்தில் 6 பேக் வைப்பதும் அவரது கனவில் ஒன்றாக இருந்தது.

    மில்க் வே கனவுகள்

    மில்க் வே கனவுகள்

    சுசாந்த் சிங்கிற்கு வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்க்க ரசிக்க புடிக்கும். வானியல் ரீதியாக மட்டுமல்லாது சந்திரன் செவ்வாய், குரு, சனி பற்றி தேடி தேடி படித்தார். குழந்தைகளை இஸ்ரோவிற்கும் நாசாவிற்கும் அனுப்ப வேண்டும் என்று கனவு கண்டவர். கைலாஷ் போக வேண்டும். ஆயிரம் மரங்களை நட வேண்டும் கிரிக்கெட் விளையாடுவது, டென்சிஸ் விளையாடுவது என விளையாட்டின் மீதான ஆர்வமும் அவருக்கு இருந்தது. 50 கனவுகளை எழுதி வைத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்த சுசாந்த் சிங் ராஜ்புத் பல கனவுகள் நிறைவேறாமலேயே மரணமடைந்து விட்டார் என்பதுதான் சோகம்.

    English summary
    Sushant Singh Rajput's list of 50 dreams in his twitter page goes viral after actor's death. Sushant Singh Rajput committed suicide on June 14 He was 34 years old.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X