யாருன்னு பாருங்க.. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே.. நெத்தியடி பதிலை சொன்ன பிரபல நடிகை
மும்பை: குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போட்டோக்களை நடிகை எவ்லின் ஷர்மா சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார்.. "இதுல வெட்கப்பட என்ன இருக்கிறது?" என்று இந்த போட்டோக்கள் தொடர்பான எதிர்மறை விமர்சனங்களுக்கும் நச்சென பதிலடி தந்துள்ளார்.
நடிகை எவ்லின் ஷர்மாவை நினைவிருக்கிறதா..?
பிரபலமான இந்திய நடிகை.. இந்தி, பஞ்சாபி, உருது மொழிகளில் 16 படங்கள் நடித்தவர்.. தமிழில் வெளியான படம் "சாஹோ" படத்திலும் நடித்தவர்... இவர் அப்பா பஞ்சாபி.. அம்மா ஜெர்மனியை சேர்ந்தவர்.. இருநாட்டு பழக்கவழக்கங்களின்படி தனி மாடலாக வளர்ந்தவர்..
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

போட்டோக்கள்
இவரது சினிமா படங்களைவிட அதிக அளவுக்கு புகழ்பெறுவது இவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள்தான்.. இதற்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. இவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் பெரும் வைரலாகிவிடும்.. இதில் உச்சக்கட்ட பிரபலமானது இவரது நிச்சயதார்த்த போட்டோக்கள்தான்..

காதல் கணவர்
ஆஸ்திரேலிய தொழிலதிபர் துஷான் பிந்தி என்பவருடன் இவருக்கு நிச்சயமானபோது, அந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார்.. நடுக்கடலில் தன்னுடைய வருங்காலக் கணவரை கட்டிப்பிடித்து முத்தம் தந்தபடியே போஸ் கொடுத்திருந்தார்.. ஒரு நண்பரின் பார்ட்டியில் தன்னுடைய வருங்கால கணவரை சந்தித்ததாகவும், கண்டவுடன் காதல் என்றும் ஏற்கனவே இவர் கூறியிருந்தார்.. அதிலும் துஷான் பிந்தி இவரிடம் தன் காதலை சொன்ன விதம் மிகவும் பிடித்துபோய்விட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியா
துஷான் பிந்தி ஒருநாள், எவ்லினை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்துள்ளார்.. அங்கு புகழ்பெற்ற சிட்னி பாலத்தின் அருகே இருவருக்கும் பிடித்த பாடல்களை லைவ்வாக இசைக்க விட்டுள்ளார்.. பிறகு அங்கேயே மண்டியிட்டு தன் காதலை துஷான் சொல்ல, உடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம் எவ்லின்... இதற்கு பிறகுதான் இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தது..

பெண் குழந்தை
இப்போது எவ்லினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.. 2 மாதமாகும் அக்குழந்தைக்கு அவா பிந்தி என்று பெயர்.. இந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுகிறார் எவ்லின்.. இதை போட்டோவாகவும் எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.. வழக்கம்போல் இவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்களை போலவே இந்த போட்டோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த போட்டோக்களுக்கு ஏராளமான வரவேற்புகள் இருந்தாலும், ஒருசிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் பதிவிட்டு கொண்டுள்ளனர்.. இதற்குதான் சரியான பதிலை சொல்லி உள்ளார் "இளம்தாய்" எவ்லின் ஷர்மா.

வலிமை
"இத்தகைய போட்டோக்கள் ஒரே நேரத்தில் பாதிப்பையும் வலிமையையும் காட்டுகின்றன.. நான் அதை அழகாக காண்கிறேன். தாய்ப்பால் மிகவும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.. மக்கள் நினைப்பதை விட தாய்ப்பால் மிகவும் கடினமானது... நீங்கள் ஒரு புதிய அம்மாவாகத் தொடங்கும் போது, அது பெரும்பாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும்.. எப்படி பார்த்தாலும், அம்மாக்கள் என்பவர்கள் தனியாக இல்லை என்பதை தெரிவிக்கவே இந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

வைரல் போட்டோக்கள்
என் கணவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.. ஆனால், ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்தவர்... அங்குதான் டாக்டராக வேலை பார்க்கிறார்.. நான் பஞ்சாபி ஜெர்மன்.. நிறைய பயணம் செய்திருக்கிறேன்.. பல கலாச்சாரங்களைப் பார்த்திருக்கிறேன்... எங்களது இந்த திருமணத்தில் கலப்பு கலாச்சாரங்கள் நிறைந்து காணப்படுவதை பெருமையாக உணர்கிறேன் என்று பூரித்து சொல்கிறார்... தன் மகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன... தாய்மையை மிஞ்சின சக்தி இந்த உலகில் ஏது?!