மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ள நீரில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில்.. தண்ணீர் தீவில் தனியே நின்ற பரபரப்பு காட்சிகள்!

Google Oneindia Tamil News

மும்பை : மும்பையில் கனமழையால் பாதல்பூர் மற்றும் வாங்கனி இடையே நடுவழியில் நின்றிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் மகாராஷ்டிர மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது.

Aerial footage of the stranded Mahalaxmi express

நேற்று மாலை முதல் மும்பையில் மழை பெய்தது. இந்த மழையால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பாத்லாபூரிலிருந்து வாங்கானி செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் உணவு, குடிநீரின்றி அவதிப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியானது. இதையடுத்து ரயில்வே துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில அரசு அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சென்றனர்.

அப்போது மக்களுக்கு தண்ணீர், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கினர். அவர்களின் பசியாற்றியவுடன் இதுவரை 500 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த நிலையில் உல்லாஸ் ஆற்றின் வெள்ளப் பெருக்கால் தனித்து நிற்கப்பட்ட ரயில் குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

English summary
Aerial footage of the stranded MahalaxmiExpress between Badlapur and Wangani; 500 out of the 700 onboard passengers evacuated so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X