மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை வாக்கெடுப்பில் நிச்சயம் வெல்வோம்: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல் நம்பிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நவம்பர் 30-ல் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா அணி வெல்லும் என மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத திருப்பமாக என்சிபி பிளவுபட்டுள்ளது. என்சிபியின் அஜித் பவார் பிரிவு, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

Ahmed Patel confidents win over trust vote in Assembly

இதனையடுத்து நேற்று முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர். இதனால் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா கட்சிகள் பெரும் அதிர்ச்சியடைந்தன.

சிவசேனா ஆட்சி அமைக்க என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட கடிதத்தை பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தந்தது என ஆளுநரிடம் அஜித் பவார் கூறிவிட்டார் என்பது என்சிபி புகார். இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் வகையில் ரிசார்ட் அரசியல் திரும்பியுள்ளது.

இந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. நுங்கம்பாக்கம் இந்திய உணவு கழக அதிகாரிகளை அதிரவைத்த சிவதாசன்இந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. நுங்கம்பாக்கம் இந்திய உணவு கழக அதிகாரிகளை அதிரவைத்த சிவதாசன்

இப்படி தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் முதல்வர் பட்னாவிஸிடம் இருந்து மட்டுமல்ல.. ஆளுநரிடம் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிடம் இருந்தும் நாம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறோம்.

இந்த நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டு வெல்ல வேண்டும் எனில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டசபையில் நவம்பர் 30-ல் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாமே வெல்வோம். அதற்கான அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

English summary
Senior Congress leader Ahmed Patel has urged Party MLAs to stay united in the face of the challenge thrown at them by the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X