• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வாயில் வருவது எல்லாம் பொய்.. அரைவேக்காடு பேச்சு.. மோகன் பகவத்தை விளாசி தள்ளிய ஒவைசி!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரி்ல் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில் 96-வது ஆண்டு விழா மற்றும் விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

நமது நாட்டின் மக்கள் தொகை கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சமூகங்களிடையேயான மக்கள் தொகையில் நிலவும் ஏற்றத்தாழ்வு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது.

பூர்வீக இந்துக்கள் மீதான துன்புறுத்தல், அதிகரிக்கும் குற்றமயமாக்கல் மற்றும் தங்கள் பகுதிகளில் சமநிலையற்ற மக்கள்தொகை வளர்ச்சி போன்றவற்றால் இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதிகள் தாலிபான்களின் வரலாறு நன்றாக தெரியும். ஆனால் சீனா, பாகிஸ்தான் தாலிபான்களை விட மோசமானது' என்று கூறினார்.

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி - அமெரிக்கா அறிவிப்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி - அமெரிக்கா அறிவிப்பு

ஒவைசி கண்டனம்

ஒவைசி கண்டனம்

மோகன் பாகவத் பேச்சுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ச்சியாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- வழக்கம் போல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகனின் பேச்சு பொய்கள் மற்றும் அரைவேக்காட்டுதனமாக இருந்தது. அவர் மக்கள் தொகை கொள்கையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற பொய்யை மீண்டும் கூறினார்.

பகோடா போடுவது எப்படி?

பகோடா போடுவது எப்படி?

முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அனைத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதில் மக்கள் தொகை சமநிலையற்ற தன்மை இல்லை.. குழந்தைகளில் திருமணம் செய்தவர்களில் 84% இந்துக்கள். 2001-2011-க்கு இடையில், முஸ்லிம் பெண்-ஆண் விகிதம் 1000 முஸ்லீம் ஆண்களுக்கு 936 முதல் 951 பெண்கள் வரை உயர்ந்தது. ஆனால், இந்து விகிதம் 931 லிருந்து 939 ஆக மட்டுமே உயர்ந்தது. இந்தியாவின் பெரும்பான்மையாக உள்ளவர்கள் இளைஞர்கள்: அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லை. அரசின் ஆதரவும் இல்லை. பகோடா போடுவது எப்படி? என்பது மட்டுமே பிரதமர் மோடி அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

தாலிபான்கள் பயங்கரவாதிகளா?

தாலிபான்கள் பயங்கரவாதிகளா?

மக்கள் தொகை கொள்கை கொண்டுவந்தால், பணி செய்யும்பிரிவில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இருப்பார்கள். வயதான பிரிவினருக்கு யார் ஆதரவு அளிப்பது.. மோகன் தலிபான்களை பயங்கரவாதிகள் என்று அழைத்தார். இது உண்மையிலேயே மோடியை அவமதிப்பதுபோல் உள்ளது. ஏனெனில் மோடி அரசுதான் தலிபான்கள் பிரதிநிதிகளை தூதரகத்தில் அழைத்துப் பேசியது. தாலிபான்கள் பயங்கரவாதிகளாக என்றால் அரசு அவர்களை உபா பட்டியலில் கீழ் கொண்டு வருமா?

என்ஆர்சி என்பது இதுதான்

என்ஆர்சி என்பது இதுதான்

காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்ததன் பலனைப் மக்கள் பெறுகிறார்கள் என்று மோகன் பகவத் தெரிவித்துளளார். ஆனால் காஷ்மீரில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுக்கு பெயர்தான் மக்கள் பலனா? என்ஆர்சி என்பது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு பொய்கள் மற்றும் அரைவேக்காட்டுதனமாக இருந்தது என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி தெரிவித்துள்ளார்.

English summary
Owaisi, the leader of the AIMIM party, said that the speech of RSS leader Mohan Bhagwat was lies and half-heartedness. He said the NRC was a weapon that could harass suspected people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X