மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்

Google Oneindia Tamil News

மும்பை: என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள் என அஜித் பவார் உறுதியளித்ததாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ், 80 மணிநேரத்தில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு பட்னாவிஸ் அளித்த பேட்டி:

Ajit Pawar assured 54 NCP MLAs support to bJP, says Fadnavis

என்சிபி தலைவர் சரத்பவாரின் ஆலோசனைப்படியே பாஜகவுக்கு ஆதரவு தருவதாக அஜித் பவார் கூறினார். சில என்சிபி எம்.எல்.ஏக்களையும் என்னிடம் பேச வைத்தார் அஜித் பவார்.

முதலில் என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் விரும்பவில்லை. சிவசேனா, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் அது செயல்பட முடியாது என என்சிபி கருதியது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?

அதனால் பாஜகவுடன் இணைந்து நிலையான அரசு அமைக்கலாம் என கூறியது என்சிபி. ஆனால் பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது. அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகளை நான் விலக்கிக் கொள்ளவும் இல்லை. இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.

English summary
Maharashtra former chief minister Devendra Fadnavis claimed that it was NCP leader Ajit Pawar who approached him to form a government in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X