மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுவிட்ச் ஆப் மோடில் அஜித் பவாரின் செல்போன்.. என்சிபி தகவல்.. அப்போ மீண்டும் மொதல்ல இருந்தா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: என்சிபி எம்எல்ஏ அஜித் பவாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக என்சிபி செய்தித் தொடர்பாளர் மாலிக் தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்பது பால்தாக்கரேவின் கனவாகும். இதை நனவாக்க அவரது மகனும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே போராடி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் சிவசேனா. முதல்வர் பதவியில் சுழற்சி முறைக்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் என்சிபி பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அக்கட்சி தனித்து விடப்பட்டது.

    சஞ்சய் ராவத்... சஞ்சய் ராவத்... யார் இந்த சஞ்சய் ராவத்?சஞ்சய் ராவத்... சஞ்சய் ராவத்... யார் இந்த சஞ்சய் ராவத்?

    அஜித் பவார்

    அஜித் பவார்

    இந்த நிலையில் காங்கிரஸ்- என்சிபியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா போராடி வந்தது. இதனிடையே திடீர் திருப்பமாக மூவர் கூட்டணிக்கு என்சிபி எம்எல்ஏக்கள் அளித்த ஆதரவு கடிதத்துடன் மாயமான அஜித் பவார் ராஜ்பவன் சென்றார்.

    முதல்வராக உத்தவ்

    முதல்வராக உத்தவ்

    அங்கு ஆளுநரிடம் ஆதரவு கடிதத்தை கொடுத்து பாஜகவை அரியணையில் ஏற்றினார். ஆனால் உச்சநீதிமன்ற வழக்கு, ஜகா வாங்கிய அஜித் பவார் ஆகியவற்றால் பாஜக அரசு 4 நாட்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து காங்கிரஸ்- என்சிபி கூட்டணியுடன் இணைந்தது சிவசேனா. முதல்வராக இன்று உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.

    சுவிட்ச் ஆப்

    சுவிட்ச் ஆப்

    இதனிடையே நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். எம்எல்ஏவாக பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அவரை சுப்ரியா சுலேவும் கட்டி அணைத்து வரவேற்றார். இந்த நிலையில் அஜித் பவாரின் செல்போன் இன்று காலை முதல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரே

    இதுகுறித்து என்சிபி செய்தித்தொடர்பாளர் மாலிக் கூறுகையில் அஜித்பவார் அவராகவே செல்போனை அணைத்து வைத்துள்ளார். அடிக்கடி அவருக்கு வரும் செல்போன் அழைப்புகளை தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார். இன்று மாலை உத்தவ் பதவியேற்பு விழாவுக்கு அவர் நிச்சயம் வருவார் என்றார் மாலிக்.

    English summary
    NCP spokesperson says that Ajit Pawar has switched off his mobile phone to avoid frequent calls. He will attend the swearing-in ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X