மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க யாரு தெரியுமா.. பாஜக முக்கிய தலைவர்களே.. எங்க கட்சியில் சேரப்போறாங்க...சொல்றது யாருனு பாருங்க!

Google Oneindia Tamil News

மும்பை: பாஜகவில் இருக்கும் சில தலைவர்கள் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தேசியவாத காங்கிரசில்( என்சிபி) இணைவார்கள் என மகராஷ்டிரா துணை முதல்வரும், என்சிபி மூத்த தலைவருமான அஜித்பவார் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால் யார் கட்சியில் சேருவார்கள் என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

Ajit Pawar says some bjp leaders will soon join NCP

இது தொடர்பாக அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:- மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, ​​என்சிபி மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் பாஜகவுக்கு சென்றனர். பாஜக ஆட்சிக்கு வரும் என்றும், தங்கள் பகுதியை முன்னேற்றம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர். ஆனால் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என அவர்கள் விரக்தி அடைந்துள்ளதால் அவர்கள் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் என்சிபிக்கு திரும்ப ஆர்வமாக உள்ளனர்.

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்கள் விரைவில் எங்களுடன் சேருவார்கள், உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் இருப்பதால் யார் கட்சியில் சேருவார்கள் என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்ததும் நாங்கள் அவர்களை எங்கள் கட்சிக்குள் வரவேற்க தொடங்குவோம் என அஜித்பவார் தெரிவித்தார்.

English summary
Maharashtra Deputy Chief Minister and NCP senior leader Ajit Pawar said some leaders in the BJP would join the Nationalist Congress Party (NCP) in the next three or four months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X