மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? அஜித் பவார் கூறும் பரபரப்பு காரணங்கள் இவை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: துணை முதல்வர் பதவியிலிருந்து தான் விலகியதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதான் காரணம் என அஜித்பவார் தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமை பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. இதற்கு உதவியவர் என்சிபி எம்எல்ஏவும் சரத்பவாரின் உறவினருமான அஜித் பவார். இவரும் துணை முதல்வராக பதவியேற்றார்.

    இந்த புதிய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இதில் இன்றைய தினம் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்குள் எல்லாம் தலைகீழானது.

    அடுத்த அதிரடி.. அஜித் பவாரை மன்னித்தார் சரத் பவார்.. பெரும் குழப்பத்தில் பாஜக அடுத்த அதிரடி.. அஜித் பவாரை மன்னித்தார் சரத் பவார்.. பெரும் குழப்பத்தில் பாஜக

    சட்டசபை

    சட்டசபை

    அஜித்பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தேவேந்திர பட்னவீஸும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே கவிழ்ந்தது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

    என்சிபி

    என்சிபி

    இந்த கூட்டத்திற்கு வந்த அஜித்பவாரை தங்கை சுப்ரியா சுலே வரவேற்றார். இந்த நிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட அஜித் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஏற்கெனவே சொன்னது போல் என்சிபியில்தான் இருந்தேன். என்சிபியில்தான் இருப்பேன்.

    என்சிபி

    என்சிபி

    அவர்கள் என்னை நீக்கினார்களா? என்சிபியிலிருந்து என்னை நீக்கியதாக கேள்விப்பட்டீர்களா இல்லை எங்காவது செய்தியை படித்தீர்களா. நான் இன்னும் என்சிபியில்தான் இருக்கிறேன்.

    எனது முடிவை மாற்றிக் கொண்டேன்

    எனது முடிவை மாற்றிக் கொண்டேன்

    கட்சியில் என்னுடைய பணி குறித்து கட்சித் தலைமையே முடிவு செய்யும். சுப்ரீம் கோர்ட் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதை அடுத்து நான் எனது முடிவை மாற்றி கொண்டேன். அது போல் என்னுடைய சக கட்சியினரிடமும் பேசினேன் என்றார்.

    English summary
    Ajit Pawar says that he is always with NCP and he has changed his decision after SC order on floor test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X