மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவ தளபதிக்கு தைரியமாக அனுமதி கொடுங்க.. அழிச்சிடுங்க.. சிவசேனா

Google Oneindia Tamil News

மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ராணுவ தளபதிக்கு உத்தரவு கொடுத்து உடனே பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் பகுதிகளை மீட்க வேண்டும் என்றும் அங்குள்ள கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்தியாவின் புதிய ராணுவ தளபதி ஜெனரல் நராவனே, நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்திய ராணுவம் தயாராக இருப்பபதாக கூறினார்.

ராணுவ தளபதியின் இந்த கருத்தை வரவேற்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார் என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்

பேசியதில் தவறில்லை

பேசியதில் தவறில்லை

அதில் பிறவியிலேயே மராத்தியரான ராணுவ தளபதி நராவனே அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. மத்திய அரசு ராணுவத்திற்கு இந்திய மேப்பை வழங்க வேண்டும். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அனுமதி கொடுக்க வேண்டும்.

அழிக்க இதுவே வழி

அழிக்க இதுவே வழி

இது மட்டும் அங்குள்ள தீவிரவாத கும்பல்களை (துக்டா-துக்டா கும்பல்கள்) மொத்தமாக ஒழிக்க ஒரே வழி. ஏனெனில் நிறைய தீவிரவாத பயிற்சி முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியில் தான் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இயக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நராவனேவின் கொள்கை

நராவனேவின் கொள்கை

இந்தியா பலமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போதிலும் பாகிஸ்தான் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் கொல்லப்படுவது குறித்து குறிபிட்டுள்ள சிவசேனா, அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே காஷ்மீர் பிரச்சினை முன்னுக்கு வருகிறது. எனவே தான் ஜெனரல் நராவனேவின் புதிய கொள்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்தியாவின் பகுதி

இந்தியாவின் பகுதி

ஜெனரல் நராவனேவின் கூற்று, பிப்ரவரி 1994 இல் இந்திய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உட்பட முழு ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி" என்று கூறியிருந்தார். அத்துடன் அதை அரசு உத்தரவிட்டால் மீட்க தயார் என்றும் கூறியிருந்தார்.

English summary
Centre should give the Army a map of India and permit the Army chief to reclaim the PoK: shiv shena
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X