மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1947ல் நேரு செய்த அந்த தவறால் உருவானதுதான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்.. அமித்ஷா குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மும்பை: 1947ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒரு பிரச்சனையே இருந்திருக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா மும்பையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அரசியல் செய்வதாகவும், நேரு தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக காரணம் என்றும் விமர்சித்தார்,

ஆட்சிக்கு வந்த உடன்

ஆட்சிக்கு வந்த உடன்

அமித்ஷா அந்த கூட்டத்தில் பேசியதாவது: பிரதமர் மோடியின் துணிச்சலான மனதை நான் வாழ்த்துகிறேன். இரண்டாவது முறையாக மீண்டும் 305 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்தார்,

இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!

ராகுலுக்கு கேள்வி

ராகுலுக்கு கேள்வி

370வது பிரிவு என்பது அரசியல் பிரச்சனை என ராகுல் காந்தி கூறுகிறார். ராகுல் பாபா நீங்கள் இப்போது தான் அரசியலுக்கு வந்து இருக்கிறீர்கள். ஆனால் காஷ்மீருக்காக, 370வது பிரிவினை ரத்து செய்தற்காக தங்கள் வாழ்க்கையை மூன்று தலைமுறையாக பாரதிய ஜனதா, வழங்கி உள்ளது. இது எங்களுக்கு அரசியல் விஷயம் அல்ல. பாரத மாதாவை பிரிக்காமல் வைக்க வேண்டும் என்ற எங்கள் இலக்கின் ஒரு பகுதியாகும்,.

 திடீர் போர் நிறுத்தம்

திடீர் போர் நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானியர்களின் ஊடுருவல்களை எதிர்த்து 1947ம் ஆண்டு ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு கொண்டிருந்த போது திடீரென பண்டிதர் ஜவஹர்லால் நேரு போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒரு பிரச்சனையே இருந்திருக்காது. இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலுக்கு 300க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு இருந்தது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மட்டும் அவர் கையாளவில்லை, நேரு கையாண்டார். திடீரென போர் நிறுத்ததை அறிவித்து இப்போது ஐநா சபை வரை பிரச்சனை போக வைத்துவிட்டார்.

என்ன சாதிப்போம்

என்ன சாதிப்போம்

"காஷ்மீரில் 40,000 பேர் இறந்துவிட்டனர், காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை அகற்றுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிப்பீர்கள் என்று காங்கிரஸார் கேள்வி எழுப்புகின்றனர். எங்களால் விரைவில் காஷ்மீர் மாநிலத்தை பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க முடியும்" இவ்வாறு கூறினார்.

English summary
Union Home Minister & BJP President Amit Shah blames ex-PM Nehru for The issue of Pakistan Occupied Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X