மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.? மம்தாவுக்கு சிவசேனா பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது- வீடியோ

    மும்பை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா மற்றும் மோடியை தடுப்பதினால் மட்டுமே, மம்தா தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என சிவசேனா வினவியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் அமித்ஷா பங்கேற்ற பேரணியின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. பின்னர் ஏற்பட்ட பயங்கர கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.

    Amit Shah is not God, Mamta is not a saint.. Shiv Sena comment

    இதற்கு பாரதிய ஜனதாவினர் தான் முக்கிய காரணம். அவர்கள் தான் வன்முறைகளை தூண்டிவிட்டுள்ளனர் என மம்தா வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கடவுள் ஒன்றும் இல்லையே என சரமாரியாக விமர்சித்திருந்தார்.

    இடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி! இடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி!

    இந்நிலையில் மம்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அமித் ஷா ஒன்றும் கடவுள் இல்லை தான். ஆனால் அதே சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துறவியும் இல்லை என காட்டமாக கூறியுள்ளது.

    சிவசேனா கட்சி தங்களது அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனநாயக அடிப்படையில் மம்தா அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அவரது வெற்றியும் தோல்வியும் ஜனநாயக அடிப்படையிலேயே தானே தீர்மானிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் செல்ல விடாமல் சாலையில் இடைமறிப்பதால் மட்டுமே மம்தாவால் வெற்றி பெற்றுவிட முடியாது

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியின் போதும் அங்கு வன்முறை இருந்தது. தற்போது மம்தா ஆட்சியிலும் இந்த கதை தொடர்கிறது. வன்முறைகள் காரணமாக மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது

    English summary
    Shiv Sena, who has questioned who is responsible for violence in West Bengal, has strongly blamed Mamata Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X