மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்!

Google Oneindia Tamil News

மும்பை: பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம் தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர்.

இதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.

பள்ளிச் சிறுவன்:

பள்ளிச் சிறுவன்:

இந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.

தடை கோரி வழக்கு:

தடை கோரி வழக்கு:

அந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

ஆணையம் தேவை:

ஆணையம் தேவை:

மேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில் அஹத் தெரிவித்துள்ளான்.

குஜராத்:

குஜராத்:

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
An 11-year-old boy from Mumbai, Ahad Nizam, has moved the Bombay High Court, seeking a ban on the popular mobile game PUBG.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X