மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடுது.. நம்மாட்களை பாருங்க.. கொரோனா வைரசை கொல்லும் நவீன வழி

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையின் வொர்லி என்ற பகுதியில் மிக மோசமான உருவத்துடன், அரக்கனின் உருவ பொம்மை செய்து, அதை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படி செய்ததால், இனிமேல் கொரோனா வைரஸ் பரவாது என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.

Recommended Video

    கொரோன வைரஸ் அச்சுறுத்தல் ... கேரளாவில் அதிரடி உத்தரவுகள்

    இதில் கொரோனா வைரசை அரக்கனாகச் சித்தரித்து உருவ பொம்மை வடிவமைக்கப்பட்டு அதன் கழுத்தில் கொரோனா அசுரன் என எழுதப்பட்டிருந்தது.

    An effigy of coronavirus was burnt in Mumbai

    அதன்பின்னர் தடுப்பூசி வடிவத்தில் நெருப்பு கொண்டு வரப்பட்டது. அதை வைத்து, கொரோனா அரக்கன் உருவ பொம்மையை, மக்கள் எரித்தனர். இதே மாதிரி, அகமதாபாத்திலும் கொரோனா அரக்கன் பொம்மையை, மக்கள் எரித்துள்ளனர்.

    இப்படியாக மக்கள் தங்கள் அச்சத்தை போக்கி வருகிறார்கள். ஆனால், இவை மூட நம்பிக்கை என்று அட்வைஸ் செய்யும் நெட்டிசன்களையும், பரவாயில்லை, எப்படியோ கொரோனா பாதிப்பு வராமல் இருந்தால் சரி என சொல்லும் நெட்டிசன்களையும் பார்க்க முடிகிறது.

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பபது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் நேற்று ஒரு ஐடி ஊழியருக்கு பாதிப்பு உறுதி செய்யப்ப்டடது. இன்று மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை நல்ல முறையில் நடக்கிறது. கேரளாவின் நிலைமைதான் சீனாவின் வூஹான் மாகாணம் போல மாறிவிட்டது. அங்கு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மார்ச் 31ம் தேதிவரை மூடப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையில் மார்ச் 13ம் தேதி துவங்கும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று, தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.

    English summary
    An 'effigy' of coronavirus was burnt during Holi festivities in Mumbai on Tuesday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X