மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆனந்த் மஹிந்திராவின் புதிய வீடியோ!.. இந்த செல்போனை எவன்டா கண்டுபிடிச்சதுனு சலித்து கொள்வோர் பாருங்க!

Google Oneindia Tamil News

மும்பை: மாற்றுத் திறனாளிக்கு செல்போன் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறது என்பது குறித்த வீடியோவை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.

இந்த நவீன யுகத்தில் செல்போன் பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு செல்போன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிலருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த செல்போன் சிலருக்கு சாபமாக இருக்கிறது.

அவ்வப்போது செல்போன் மணி ஒலிப்பதை பார்த்து "ஐயோ இந்த போனை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சான்னா அவ்வளவுதான்" என நம்மில் பலர் அடிக்கடி சலித்து கொள்வது வழக்கம்.

2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. ஒரே பனி மூட்டமா இருக்கு.. வரலாறு காணாத உறைபனியால் உறையும் டெல்லி2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.. ஒரே பனி மூட்டமா இருக்கு.. வரலாறு காணாத உறைபனியால் உறையும் டெல்லி

ட்விட்டர் பக்கம்

ஆனால் அவையெல்லாம் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறது என்பது குறித்த வீடியோவை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார். பொதுவாக தனக்கு பிடித்தமான வீடியோக்களை ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார்.

 வீடியோ கால்

வீடியோ கால்

அந்த வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவில் வாய் பேச முடியாத நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் யாருக்கோ வீடியோ கால் போட்டு சைகை மூலம் தகவல் தருகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

வாய் திறந்து பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சைகை மூலம் தான் நினைத்ததை அடுத்தவருக்கு புரிய வைக்க முடிகிறது. அவர் தனது ட்வீட்டில் கூறுகையில், நம் உலகை செல்போன் ஆக்கிரமித்து கொண்ட விதத்தை நாம் அவ்வப்போது விமர்சனம் செய்கிறோம்.

 விவாதங்கள்

விவாதங்கள்

இந்த சாதனம் நம்மில் பலருக்கு புதிய தகவல் தொடர்பை ஏற்படுத்திவிட்டது என்பதை நாம் நமக்குள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

English summary
Anand Mahindra releases a video and says that We often criticise the way in which mobile devices have taken over our world.. It’s good to remind ourselves that these devices have also OPENED up a whole new world of communication for many of us...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X