• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அர்ணாப் கைது.. தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கின் குடும்பத்தினர் எழுப்பிய உருக்கமான கேள்வி

|

மும்பை: 2018 ஆம் ஆண்டில் உள்கட்ட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53 வயது) தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதை அன்வே நாயக்கின் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்று உள்ளனர்.

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கைது நடவடிக்கையை , கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட கட்டட வடிமைப்பாளரின் குடும்பத்தினர் வரவேற்று உள்ளனர்,

2018 ஆம் ஆண்டில் அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள்கட்ட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53 வயது) தற்கொலை செய்து கொண்டார். தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப், ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தராததே தற்கொலைக்கு காரணம் என அவர் எழுதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார்.

அதிகாலையில் அர்ணாப் கோஸ்வாமி அதிரடி கைது.. அடித்து இழுத்துச் சென்றதாக ரிபப்ளிக் டிவி புகார்!

மும்பை போலீசார்

மும்பை போலீசார்

இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் அப்போது அர்ணாப் கைது செய்யவில்லை. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு மற்றும் டி ஆர்.பி ரேட்டிங் தொடர்பான சர்ச்சை வழக்குகள் அர்ணாப் மீது பாய்ந்தது.

பாஜக எம்பிக்கள் கண்டனம்

பாஜக எம்பிக்கள் கண்டனம்

இந்த சூழலில் மும்பை காவல்துறை அர்னாப் கோஸ்வாமியை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. கைதின் போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்கள், செய்தியாளர்கள் என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அர்ணாப்பின் கைதுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகமாக உள்ளது.

நடவடிக்கை இல்லை

நடவடிக்கை இல்லை

இந்நிலையில் அர்னாப் கைது நடவடிக்கையை அன்வய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வரவேற்றுள்ளார்கள். இது தொடர்பாக பேசிய அன்வய் நாயக்கின் மனைவி கூறும் போது தற்கொலை செய்து கொண்ட எனது கணவர் அர்னாப் உட்பட மூன்று நபர்களின் பெயர்களை தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நன்றிகடன் பட்டுள்ளேன்

நன்றிகடன் பட்டுள்ளேன்

இன்று மகாராஷ்டிரா காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. எனது கணவர் பணத்தைப் பெற்றிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். நாங்கள் நீதிக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

வீடு புகுந்து மிரட்டினார்கள்

வீடு புகுந்து மிரட்டினார்கள்

இதனிடையே அன்வய் நாயக்கின் மகள் அட்னியா கூறும் போது,. நாங்கள் பிரதமர் அலுவலகம், சைபர் செல் துறை, பொருளாதார அலுவலக பிரிவுக்கு எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடிதம் எழுதினோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ரிபப்ளிக் டிவி, எனது தந்தைக்கு ரூ .83 லட்சம் செலுத்தவில்லை. என் தந்தை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார், ஆனால் பதில் கிடைக்கவில்லை. இந்த விவாகரத்தில் தந்தை தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டார். எங்களை வீடுபுகுந்து மிரட்டினார்கள். எங்கள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பபட்டது.. அவர்கள் எனது வாழ்க்கையையும் அழித்துவிடுவார்கள் என்று மிரட்டினர்,

வழக்கு முட்க்கப்பட்டது

வழக்கு முட்க்கப்பட்டது

"அர்னாப் ஒரு செல்வாக்கு மிக்கவர், அதன் காரணமாக வழக்கு முடக்கப்பட்டது. இன்று, நாங்கள் மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுகிறோம், ஆனால் என் தந்தை தற்கொலை செய்து கொண்ட போது ஏன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் இதற்காக அரசின் ஒவ்வொரு துறையையும் நாடினோம். ஆனால் அப்போது நடக்கவில்லை" என்றார்.

நீதி வேண்டும்

நீதி வேண்டும்

அன்வய் நாயக்கின் குடும்பத்தினர் மேலும் கூறுகையில். "யாராவது 5,000 அல்லது 500 ரூபாயை இழந்தால் அது உங்களுக்குத் வேதனையாக இருக்காதா? எங்களுக்கு வாழ உரிமை இல்லையா அல்லது அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டுமே வாழ உரிமை இருக்கிறதா? அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வழக்கு) பற்றி அதிகம் சொல்லிக் கொண்டிருந்தார். எனது கணவர் தற்கொலைக் குறிப்பில் அவரது பெயரை எழுதியிருந்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவருக்கு எதிராக. இந்திய மக்கள் உண்மையை ஆதரிக்க வேண்டும், அரசியல் தலையீடு வேண்டாம்" என்றார்கள்.

 
 
 
English summary
"My husband had written the names of three people in the suicide note, but no action was taken against them, today Maharashtra Police took action, I am thankful to them. If my husband had got the money, he would have been alive," said Akshata Naik, wife told about Arnab arrest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X