மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா எந்த யோசனையை முன்வைத்தாலும் பரிசீலிப்போம்: மூத்த காங். தலைவர் சவாண்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra : Shiv Sena warns BJP | இது ஒன்றும் ஹரியானா இல்லை.. பாஜகவிற்கு சிவசேனா வார்னிங்!-வீடியோ

    மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா எந்த யோசனையை முன்வைத்தாலும் பரிசீலிப்போம் என்று முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இத்தேர்தலில் பாஜக 105 இடங்களையும் சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின.

    Any proposal from Shiv Sena We will consider, says Prithviraj Chavan

    இருகட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. ஆனால் முதல்வர் பதவி, அமைச்சர்களுக்கான துறைகள் ஆகியவை தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. இதனால் புதிய அரசு பதவியேற்காமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பிடிஐ ஊடகத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவாண் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    சிவசேனாவிடம் இருந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த யோசனையும் எங்களுக்கு வரவில்லை. அப்படியான ஒரு யோசனையை சிவசேனா முன்வைத்தால் கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து பரிசீலிப்போம்

    சிவசேனாவின் யோசனை என்பது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்.

    இத்தேர்தலில் காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வென்றன. 56 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் காங்கிரஸ்_ தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்கலாம் என்கிற யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்!காஷ்மீர் பற்றி பேசவில்லை.. ஆனாலும்.. பணக்கார நண்பன் சவுதியை இழக்கும் பாக்... மோடியின் மூவ்!

    ஆனால் 3 கட்சிகளுமே இதனை நிராகரித்து வரும் நிலையில் பிரித்வராஜ் சவாண் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Former Maharashtra Chief Minister Prithviraj Chavan said that any proposal from Shiv Sena to form the govt, they will consider it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X