மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா கூட்டணி அரசில் சலசலப்பு? கூட்டணி ஆட்சி தொடர 3 நிபந்தனை விதித்தாரா சோனியா?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளின் ஆட்சி தொடர உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி நிபந்தனைகளை விதித்ததாக முன்னாள் முதல்வர் அசோக் சவான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்டணிக்குள் சலசலப்பும் நிலவுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் நாந்தெட் தொகுதியில் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசுகையில் அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்த வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உத்தவ் தாக்கரேவிடம் எழுதி வாங்கிக் கொள்ளுமாறு சோனியா காந்தி எங்களிடம் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்

அசோக் சவான்

அசோக் சவான்

அதை நாங்கள் உத்தவிடம் தெரிவித்தோம். எதிர்பார்ப்புக்கு விரோதமாக ஆட்சி நடத்தினால் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என சோனியா தெரிவித்தார். அதையும் உத்தவிடம் கூறினோம். அவரும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஆட்சி அமைய நாங்கள் ஆதரவளித்தோம். அசோக் சவானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆட்சி அமைப்பதற்காக நடந்த ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சிவசேனை விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அசோக் சவானின் கருத்தை கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில் 3 கட்சிகளும் ஆட்சி அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரித்தோம்.

திரிக்கப்பட்ட கருத்து

திரிக்கப்பட்ட கருத்து

அதில் 3 தலைவர்களும் கையெழுத்திட்டனர். அசோக் சவான் கூறியது போல எதுவும் இல்லை என்றார். தனது கருத்து குறித்து அசோக் சவான் விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறுகையில் 3 கட்சிகளும் சேர்ந்து தயாரித்த குறைந்தபட்ச செயல்திட்டத்தை பற்றித்தான் நானும் பேசினேன். அதில் கையெழுத்து போட்டுள்ளோமே. நான் பேசியது திரிக்கப்பட்டுள்ளது.

சலசலப்பு

சலசலப்பு

நான் யாருக்கும் எதிராக பேசவில்லை. எங்களது கூட்டணி அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது என்றார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்தது. இந்த நிலையில் இது போல் முரண்பட்ட கருத்துகளால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களிடையே பனிப்போர் இருப்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது.

English summary
Minister Ashok Chavan says that Sonia had got written agreement from Shivsena that the government should work with constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X