மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாவ்.. கிரிக்கெட் உலகில் ரொம்பவும் அரிதான நிகழ்வு.. ஏன் வைரலாகிறது இந்த போட்டோ!

Google Oneindia Tamil News

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியை வென்றதோடு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 372 ரன்கள் என்ற இமாலய ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வென்று புது சாதனையையும் பதிவு செய்துள்ளது.

கடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலைகடனால் மூழ்கிய குடும்பம்.. ராணிப்பேட்டையில் 3 பேர் தற்கொலை

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்கள் எடுத்தது. 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது, நியூசிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் ஆகும்.

மும்பை

மும்பை

மும்பையில் பிறந்து வளர்ந்த அவர் 8 வருடங்களுக்கு பிறகுதான் மும்பையை விட்டு இடம் பெயர்ந்தார். மீண்டும் பிறந்த இடத்தில் கிரிக்கெட் விளையாட கிடைத்த ஒரு வாய்ப்பையும் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றினார்.

இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா

இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்து அணியில் இன்னொரு இந்திய வம்சாவளி வீரரும் விளையாடி வருகிறார். அவர் பெயர் ரச்சின் ரவீந்திரா. இந்தியாவின் 2வது இன்னிங்சில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்தியாவிலும் இரு இடது கை சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஒருவர் ரவீந்திர ஜடேஜா. இன்னொருவர், அக்சர் பட்டேல். இந்த நான்கு பேருமே இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதோடு, அவர்கள் பெயர்களிலும் ஒற்றுமை உள்ளது.

பரவும் படம்

பரவும் படம்

எப்படி என்கிறீர்களா.. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இவர்கள் நான்கு பேரின் பின் பக்க சட்டை படங்களை சேர்த்தால்போல ஷேர் செய்திருந்தபோதுதான் பலருக்கும்.. ஆமால்ல.. என்று தோன்றது. அந்த படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

எப்படி பொருத்தம் பாருங்க

எப்படி பொருத்தம் பாருங்க

அக்சர் என்று அக்சர் பட்டேல் ஜெர்சியில் எழுதப்பட்டிருக்கும் அல்லவா. அவர் நிற்கிறார். அவருக்கு அடுத்தாற்போல நியூசி வீரர்கள் அஜாஸ் பட்டேல் மற்றும் ரவீந்திரா நிற்கிறார்கள். அவர்கள் ஜெர்சியில், பட்டேல் மற்றும் ரவீந்திரா என எழுதப்பட்டுள்ளது. வலது பக்கம் கடைசியில் ரவீந்திர ஜடேஜா நிற்கிறார். அவர் ஜெர்சியில் ஜடேஜா என எழுதப்பட்டிருந்தது. இப்போது சேர்த்து வாசித்து பாருங்கள்.. அக்சர் பட்டேல்.. ரவீந்திர ஜடேஜா.. என்று வருகிறது. இரு நாட்டு வீரர்களின் பெயர்களை இணைத்தால் இந்தியாவின் இரு வீரர்கள் பெயர் முழுமையடைகிறது. அரிதாகத்தான் இப்படி 4 பேருக்கு இரட்டை பெயர் அமையும். இப்போது உள்ள அணியில் அப்படி ஒரு பொருத்தம் அமைந்துள்ளது. நியூசிலாந்தின் இவ்விரு வீரர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்க கூடும் அல்லவா.

English summary
IND vs NZ: Axar, Patel, Ravindra, Jadeja, wow Ravichandran Ashwin's Picture After Mumbai Test Win Shows How Cricket Unites Players Names.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X