மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.1200 கோடி கடன்.. திரும்ப செலுத்தாத அனில் அம்பானி! எஸ்பிஐ வழக்கில் நிர்வாகியை நியமித்த தீர்ப்பாயம்

Google Oneindia Tamil News

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக தனிப்பட்ட திவால் நடைமுறையைத் தொடங்கக் கோரும் பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை விசாரிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புக் கொண்டுள்ளது.

Recommended Video

    மீண்டும் TikTok | Ambani's Reliance உதவியை நாடும் Byte Dance | Oneindia Tamil

    மும்பையில் உள்ளது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இதன் இரு உறுப்பினர்கள் குழு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புகாரை விசாரிக்க திவால்நிலை நிர்வாகியை நியமித்துள்ளது.

    Bankruptcy Case Against Anil Ambani: Tribunal To Verify SBI Claim

    அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின், ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு எஸ்பிஐ கடன் வசதியை நீட்டித்தது. இந்த கடன் வசதியின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அண்ட் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 565 கோடி மற்றும் ரூ .635 கோடி ஆகிய இரண்டு கடன்களை எஸ்பிஐ 2016ம் ஆண்டு ஆகஸ்டில் வழங்கியது. ஆக மொத்தம் சும்ார், ரூ.1200 கோடி. அனில் அம்பானி இந்த கடன்களுக்கு வங்கியிடம், 160 மில்லியன் டாலருக்கு தனிப்பட்ட உத்தரவாதம் (personal guarantees)அளித்தார்.

    ஆனால், உத்தரவாதப்படி, 2017ம் ஆண்டு ஜனவரியில், ஆர்.காம் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் கடனை திரும்ப செலுத்தாமல், வராக் கடன் என மாற்றப்பட்டது.

    இதையடுத்து, எஸ்பிஐ பல முயற்சிகள் எடுத்தும், அம்பானி நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை. கேரண்டி கொடுத்தீர்களே, பணத்திற்கு என்ன வழி என எஸ்பிஐ கேட்டும், அனில் அம்பானி உரிய பதிலை அளிக்கவில்லையாம்.

    அசோக் லவசாவிற்கு பதிலாக.. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமனம்அசோக் லவசாவிற்கு பதிலாக.. தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமனம்

    இதையடுத்து 2018ம் ஆண்டு ஜனவரியில், எஸ்பிஐ அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தை ரத்து செய்தது. இது தொடர்பாக எஸ்பிஐ மும்பையிலுள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், திவால்நிலை நிர்வாகியை நியமிப்பதாக அறிவித்துள்ளது. ஜிதேந்திர கோத்தாரி என்பவர் இந்த அதிகாரியாக செயல்படுவார்.

    இவர் எஸ்பிஐ புகாரை ஆய்வு செய்து, அம்பானி மீதான திவால் நடைமுறைக்கு பரிந்துரைக்கலாம், அல்லது புகாரை நிராகரிக்கலாம்.

    English summary
    A court has agreed to hear a petition by the nation's largest lender seeking to initiate personal bankruptcy against tycoon Anil Ambani after the former billionaire failed to repay debt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X