மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் பாஜக அணி 38- 42 இடங்களை கைப்பற்றும்... இந்தியா டுடே கணிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாடுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகளின் படி மகாராஷ்டிராவில் பாஜக அணி 38 முதல் 42 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 17வது மக்களவை தேர்தலூக்கான ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது.

ஏழு கட்டத் தேர்தல்களும் முடிந்துள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.அந்த வகையில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையே இழுபறியா? என்ன சொல்கிறது எக்ஸிட் போல்? ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் இடையே இழுபறியா? என்ன சொல்கிறது எக்ஸிட் போல்?

பாஜக - சிவசேனா

பாஜக - சிவசேனா

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகயுடன் சேர்ந்து சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்ததால் சிவசேனா மற்றும் பாஜக இடையே பெரும் விரிசல் ஏற்ப்பட்டது.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

இதனையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

4 கட்டங்களாக தேர்தல்

4 கட்டங்களாக தேர்தல்

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட்டன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி நான்கு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பாஜகவுக்கு வெற்றி முகம்

பாஜகவுக்கு வெற்றி முகம்

இந்தநிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி 38 முதல் 42 இடங்களிலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆறு முதல் 10 இடங்களிலும் வெல்லும் என்றும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களிலும் வெல்லும் எனவும் இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பாஜகவுக்கு சரிவு

பாஜகவுக்கு சரிவு

இதே போல், இந்தியா டுடே - ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தென்மாநிலங்களை பொறுத்த வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 55 - 63 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 23 - 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 35 - 46 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Exit Polls 2019: BJP alliance will get 38-42 seats In Maharashtra India Today's poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X