மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பெஷல் வாஷிங் பவுடர்.. பிற கட்சியினரை அதில் கழுவிட்டுதான் இணைத்து கொள்வோம்.. மத்திய அமைச்சர் தடாலடி

Google Oneindia Tamil News

மும்பை: பிற கட்சி தலைவர்கள் பாஜகவில் சேரும் முன்பு ஸ்பெஷல் வாஷிங்மெஷினில், குஜராத்தில் இருந்து ஒரு ஸ்பெசல் வாஷிங் பவுடரை வாங்கி பயன்படுத்தி. நன்றாக கழுவிவிட்டே பாஜகவில் இணைக்கிறோம் என மத்திய அமைச்சர் ரோஷாஹேப் டன்வே தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மைக்காலமாக காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

BJP has a special washing poweder which it uses to clean leaders from other parties before induction: Raosaheb Danve

இதற்கு தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) மற்றும் காங்கிரஸ் தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளின் விசாரணையை பயன்படுத்தி மிரட்டி பாஜகவில், எதிர்க்கட்சி தலைவர்களை சேர கட்டாயப்டுத்துவதாகவும் அந்த கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

என்னது கொ.ப.செ.வா? திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!என்னது கொ.ப.செ.வா? திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கரஸ் கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருவது மத்திய அமைச்சர் ரோஷாகேப் டன்வே தெரிவித்துள்ள கருத்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் ஜல்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறுகையில், பாஜகவிடம் ஒரு வாஷிங் மெஷின் இருக்கு. அந்த மெஷினில் குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்பெசல் நிர்மா பவுடரை போட்டு நன்றாக கழுவி வாஷிங் செய்த பின்னரே அவர்களை பாஜகவில் சேர்த்து கொள்கிறோம்" என்றார்.

English summary
Union Minister Raosaheb Danve Patil in Jalna, Maharashtra: BJP has a washing machine. Before taking anyone in the party, we wash them in the machine. We have the Nirma powder of Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X