மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் பிடியிலிருந்து விலகும் ஜார்க்கண்ட்.. சின்ன மாநிலங்களில் கூட தோல்வி.. சிவசேனா தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு இதான் காரணமா ?

    மும்பை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வி அடைய போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அக்கட்சியை சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.

    மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும், ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதாவது காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணியோ அறுதி பெரும்பான்மையை கடந்து 47 இடங்களில் வெற்றி பெற்றது.

    கருணாநிதியை மிஞ்சிய ராஜதந்திரம்... பேரணியை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்கருணாநிதியை மிஞ்சிய ராஜதந்திரம்... பேரணியை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்

    ஜார்க்கண்ட் மாநிலம்

    ஜார்க்கண்ட் மாநிலம்

    எனவே ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை இழக்க போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில் பாஜகவின் கைகளில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் நழுவுகிறது.

    வெற்றி

    வெற்றி

    மகாராஷ்டிராவுக்கு பிறகு பெரும் முயற்சிகள் எடுத்தும் சின்ன மாநிலங்கள் கூட பாஜகவின் பிடியிலிருந்து விலகுகிறது என ராவத் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    எனினும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. இதையடுத்து பல்வேறு ட்விஸ்ட்களுக்கு பிறகு, பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே ஆட்சியிலிருந்து விலகியது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இதையடுத்து சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இதில் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் 3 கட்சிகளும் கணிசமான இடங்களில் அங்கம் வகிக்கின்றன.

    English summary
    As BJP is going to sink in Jharkhand, Shivsena's Sanjay Raut criticises his former ally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X