மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால்! மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ganguly Meets Amit Shah rumored to be BJP CM candidate in West Bengal

    மும்பை: கங்குலியை வைத்து மேற்கு வங்க சட்டசபை எதிர்கொள்ளும் திட்டத்துடன் பாஜக அவரை பிசிசிஐ தலைவராக்கி அழகு பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. கங்குலி நிச்சயம் மம்தாவுக்கு கடும் சவாலாக இருப்பார் என்பதால் இந்த திட்டத்தை தீட்டியிருக்கிறதாம் பாஜக.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவின் இளவரசர் என்று அந்த ஊர் மக்களால் போற்றப்படுகிறார்.

    அவரை அரசியலில் களம் இறக்கி பாஜகவின் காவி கொடியை , இடதுசாரிகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் பறக்க விட வேண்டும் என பாஜக ஆசைப்படுகிறது.

    ராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்ராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்

    பிசிசிஐ தலைவர்

    பிசிசிஐ தலைவர்

    இதற்காக விடப்பட்ட தூதை கங்குலி பச்சைக்கொடி காட்டி ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. எனவே காவி வேட்டையில் விரைவில் மம்தாவுக்கு எதிராக நம்ம தாதா கங்குலி பிரச்சாரம் செய்யக்கூடுமாம். இந்த திட்டத்தை மனசில் வைத்தபடிதான் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியே இல்லாமல் நியமிக்கப்பட்டு உள்ளாராம்.

    ஆதரவு மாறியது

    ஆதரவு மாறியது

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30மணிக்கு டெல்லியில் இருந்து பவர்புல் அமைச்சர் ஒருவர் மும்பையில் இருந்த அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசியிருக்கிறார். அப்போது அனுராக் தாகூரும் உடன் இருந்திருக்கிறார். அப்போது தான் கங்குலி பிசிசிஐ தலைவராகப்போகிறார் என்ற விஷயமே வந்திருக்கிறது.

    கங்குலி தேர்வு

    கங்குலி தேர்வு

    அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது 10.30மணிக்குள் எல்லாருமே கங்குலிக்கு ஆதரவு அளித்ததனர். ஒருமனதாக அவரும் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெற்றி பெறுமா

    வெற்றி பெறுமா

    அதுவரை பிரஜேஷ் படேல் தான் பிசிசிஐ தலைவராக போவதாக சொல்லப்பட்டு வந்தது. அவருக்கு வடகிழக்கு கிரிக்கெட் மேம்பாட்டு கமிட்டியின் ஆதரவும் இருந்தது. ஆனால் பாஜக தலைவர்கள் அவருக்கு பதில் கங்குலியை தலைவராக்க ஆதரவு அளித்தனர். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு சவாலாக கங்குலியை இறக்கும் முடிவில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    BJP larger plan in west bengal election 2021: how Saurav Ganguly elected chairperson of the Board of Control for Cricket in India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X