மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இங்க பாருங்க.. மோடியே அதை ருசிச்சி சாப்பிடுகிறார்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பாஜக தலைவர் #Poha

Google Oneindia Tamil News

மும்பை: அவலில் செய்யப்படக்கூடிய மகாராஷ்டிராவின் பிரபலமான 'போகா' (Poha) எனப்படும் உணவு உட்கொள்வோர், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பாஜக தலைவர் கூறியுள்ள கருத்து பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

அவல் சாப்பாடு என்பது தமிழகத்திலும் கூட ரொம்ப பிரபலம். அரிசியிலிருந்து அவல் தயாரிக்கப்படுகிறது அதில் சர்க்கரை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து புட்டு அல்லது இடியாப்பம் போல உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக இருக்கிறது.

இதில், மஞ்சள், வெங்காயம், தக்காளி, நிலக்கடலை போன்றவற்றை கலந்து சாப்பிடும் பழக்கம் பல மாநிலங்களில் இருக்கிறது. இதை, 'போகா' என்று வட இந்தியாவில் அழைப்பார்கள்.

தனியார்மயத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.. 44% பேர் பச்சை கொடி.. மூட் ஆப் தி நேஷன் சர்வே ஷாக்கிங் முடிவு!

சர்ச்சை

சர்ச்சை

இப்படி காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு உணவு பழக்கத்தை பாஜக தேசிய செயலாளர்களில் (எச்.ராஜா வகிப்பது போன்ற பதவி) ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா, இப்போது ஃப்ரீயாக, பிரபலப்படுத்திவிட்டார். இதற்கு காரணம் சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தின், இந்தூர் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர் சொன்ன கருத்துதான். தனது வீட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்ட சில தொழிலாளர்கள் தொடர்ந்து போகா உணவை உட்கொண்டதாகவும், எனவே அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று நான் சந்தேகிக்கிறேன் என்று பேசிவிட்டார்.

அவல் பிரியர்கள்

அவல் பிரியர்கள்

நான் இதுபற்றி காவல்துறையில் இன்னமும் புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சம்பவத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் என்றும் பெருமிதமாகக் கூறினார். இதைக் கேட்ட அவல் பிரியர்கள் ஆவேசம் அடைந்து விட்டனர். சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை அவர்கள் கொட்டி தீர்த்து வருகின்றனர். "எங்கள் வீட்டில், சலவைத் தொழில் செய்யக் கூடியவர், ஒருநாள் பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அனேகமாக, அவர் அமெரிக்கராக இருக்கக்கூடும்" என்று ஒரு நெட்டிசன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

மோடியே சாப்பிடுவார்

இந்த நெட்டிசனை பாருங்க. மோடிக்கு, கிச்சடியும், போகாவும் பிடிக்கும் என்று கூறி வெளியான ஒரு செய்தியை எடுத்து, இப்போது, விஜயவர்கியா கூறிய கருத்துடன் கோர்த்துவிட்டுள்ளார். இதை பார்த்து விஜய்வர்கியா என்ன சொல்வாரோ தெரியாது. உணவை தொடர்புபடுத்தி அரசியல் தலைவர்கள் வம்பு பேசுவது இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று பல பாஜக தலைவர்கள் கூறியதும், அதற்கு எதிராக கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதும் நினைவிருக்கலாம்.

இங்க பாருங்க யாருன்னு

இந்த நெட்டிசனை பாருங்கள். பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் மற்றும் கிரிக்கெட் பிரமுகர்கள் போகா சாப்பிட்டதை போட்டு காட்டி சீண்டியுள்ளார். இங்க பாருங்க, சில வங்கதேசத்துக்காரங்க, போகாவும், ஜிலேபியும் சாப்பிடுறாங்க என கூறியுள்ளார் இந்த நெட்டிசன். சமீபத்தில் பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகளை முன்னிட்டு, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். ஆனால் அல்வா என்பது ஆப்கானிஸ்தான் நாட்டின் வார்த்தை என்று ஓவைசி தெரிவித்து இருந்தார். இப்போது அவல் மூலமாக தயாரிக்கப்படும் போகா உணவு, வங்கதேசத்தை சேர்ந்தது என்று பாஜகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரானது

முன்பு மாட்டிறைச்சி என்றார்கள், இப்போது, போகா. ஆன்டி நேஷனல் உணவு பொருட்களின் பட்டியல் எனபது, மிக வேகமாக கூடிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் வேறு மாதிரி கலாய்துள்ளார். இது தெரியாம நான்வேற நேற்று போகா சாப்பிட்டேனே. அப்போ பாஸ்போர்ட் வாங்கனுமோ என்று கேட்டுள்ளார் அவர்.

சம்பளம்

இந்த நெட்டிசன் இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார். நீங்கள் சொல்வதன் அர்த்தம், நீங்கள் அந்த தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கவில்லை என்பதுதான். நீங்கள் கொடுத்த பணத்தால் அவர்களால் 'போஹா' மட்டுமே சாப்பிட முடிந்துள்ளது. இது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் வங்கதேசத்தில் இதை நாங்கள் போஹா என்று அழைப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வீட்டுக்கு பணம் அனுப்புகிறார்கள்

"விசித்திரமான உணவு பழக்கம் Poha" என்று சொல்லும் பாஜக தலைவருக்கு ஒருவேளை தெரியாது போல. போகா (நான் விரும்புகிறேன் & இந்தியாவின் பல பகுதிகளிலும் இது ஒரு விருப்ப உணவு), ஏழைகளுக்கும் ஒரு பிரதான உணவு. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்கள் 80% வருமானத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய தேவை இருப்பதால், போகா அவர்களுக்கு குறைந்த செலவிலான உணவு. இவ்வாறு இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

English summary
BJP leader Kailash Vijayvargiya says some of the labourers carrying out construction work at his house recently were likely to be Bangladeshis as they had "strange" eating habits and were consuming only 'poha' (flattened rice)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X