மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு

Google Oneindia Tamil News

மும்பை: வெப் சீரிஸில் என் அனுமதி இல்லாமல் எனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக அனுஷ்கா சர்மாவை அவரது கணவர் விராத் கோஹ்லி விவாகரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் குர்ஜார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Anushka sharma-வை Virat kohli விவாகரத்து செய்ய வேண்டும் - பஜக எம்.எல்.ஏ

    பாதாள் லோக் அதாவது பாதாள உலகம் என்ற கிரைம் த்ரில்லர் கலந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டது. படுகொலை முயற்சி குறித்த வழக்கை விசாரிக்கும் ஒரு காவலர் பற்றிய கதையாகும். இது 43 முதல் 53 நிமிடங்கள் கொண்ட கதையாகும். இதை நடிகை அனுஷ்கா சர்மாவும் கர்னேஷ் சர்மாவும் தயாரித்தனர்.

    இந்த தொடரின் படப்பிடிப்பு 110 நகரங்களில் நடைபெற்றன. கதையாசிரியர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    மாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம் மாவட்டம் விட்டு மாவட்டம் ஓனரை சுமந்து வந்ததால் குவாரன்டைனில் இருக்கும் குதிரை.. காஷ்மீரில் ருசிகரம்

    அரசியல்வாதி

    அரசியல்வாதி

    கடந்த 2018-ஆம் ஆண்டு காசியாபாத்தில் 6 வழிப்பாதை திட்ட தொடக்க விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்எல்ஏ நந்தகிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட படங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தொடரில் ஒரு மோசமான அரசியல்வாதியாக பால்கிருஷ்ணா பாஜ்பாய் என்ற கதாபாத்திரம் இருக்கிறது.

    எடிட்

    எடிட்

    இந்த கதாபாத்திரம் பாலத்தை திறந்து வைப்பது போன்ற காட்சிகளுக்கு காசியாபாத் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த விழாவில் கலந்து கொண்ட மற்றவர்களின் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டன. ஆனால் முதல்வர் யோகி, எம்எல்ஏ நந்தகிஷோரின் புகைப்படங்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுவிட்டது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அத்துடன் இந்த தொடரில் நேபாள மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் உள்ளதால் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் உருவம் மாற்றப்படாத தனது படத்தை பயன்படுத்துவதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என அனுஷ்கா சர்மா மீது நந்தகிஷோர் புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் மத பிரச்சினையையும் தூண்டிவிடும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    விவாகரத்து

    விவாகரத்து

    எனவே அனுஷ்கா சர்மா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் அனுஷ்காவின் கணவர் விராத் கோஹ்லிக்கு ஒரு கோரிக்கையை அளித்துள்ளார். அதில் விராத் நீங்கள் ஒரு தேசப்பற்றுள்ளவர். தேசத்திற்காக விளையாடுகிறீர்கள். நீங்கள் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    BJP MLA files case against Anushka Sharma and also demanded Virat Kohli to divorce her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X