மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரலாம்..அதுக்குன்ணு இப்படியா.. எதிர்க்கட்சியினரின் அதிகப்படியான வருகையால் பாஜக விசுவாசிகள் அப்செட்

Google Oneindia Tamil News

மும்பை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சியில் இருந்து 12க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எதிர்க்கட்சியினர் இப்படி அதிகப்படியான அளவு பாஜகவில் இணைவதை கண்டு அந்த கட்சியின் தீவிர விசுவாசிகள் அப்செட்டில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இதன் காரணமாக தேசிய வாத காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

திமுகவில் தங்கதமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு.. கொள்கை பரப்பு செயலாளரானார்திமுகவில் தங்கதமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பொறுப்பு.. கொள்கை பரப்பு செயலாளரானார்

பாஜகவினர் அதிருப்தி

பாஜகவினர் அதிருப்தி

இப்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். அதிகப்படியான தலைவர்களின் வருகையால் மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எதிர் எதிர் அரசியல்

எதிர் எதிர் அரசியல்

சட்டசபை தேர்தலில் சீட் கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் கலக்கத்தில் உள்ளனார்கள் அந்த மாநில பாஜக தலைவர்கள். இப்படி ஒரேடியாக எல்லாரும் வந்து சேர்ந்தால் யாருக்கு சீட் கிடைக்கும் என்று கலக்கத்தில் உள்ளனர். இவ்வளவு காலம் எதிர்எதிராக பேசி அரசியல் செய்தவர்கள் இப்போது ஒரே அணியில் வருவதால், இனி விமர்சனங்களும் செய்ய முடியாது என்று கவலை அடைந்துள்ளனர்.

பாஜக தலைவர் எதிர்ப்பு

பாஜக தலைவர் எதிர்ப்பு

கடைசியாக அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என்சிபி கட்சி மாவட்ட தலைவர் மதுகர் பிச்சாத் உள்பட இரண்டுபேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த அசோக் பங்காரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பிச்சாத் கைதில் இருந்து தப்பிப்பதற்காக பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக வித்தியாசமான கட்சி. இங்கு திருடர்களுக்கும், வழிபறி கொள்ளையர்களுக்கும் இடமில்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் திலீப் சோபா

முன்னாள் அமைச்சர் திலீப் சோபா

இது மடடுமல்ல சோலாபூர் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த பாஜகவின் ரவுத் என்பவர் என்சிபியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் திலீப் சோபாலின் வருகையால் தங்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமே என்று வருத்தத்தில் உள்ளார். இருந்த போதிலும் தான் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார்.

பாஜகவினர் அப்செட்

பாஜகவினர் அப்செட்

இதேபோல் நாசிக் பல்சோர் உள்பட பல்வேறு தொகுதிகளில் எதிர்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்ததால் அந்த கட்சி தலைவர்கள் சீட் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும் என வருத்ததில் உள்ளார்கள்.

English summary
dozen leaders joined bjp from the Congress and NCP in last month: bjp loyalists hugely upset
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X