மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருக்கடி கொடுக்கும் சிவசேனா.. மீண்டும் போட்டியிட்டு நிரூபிக்க பாஜக தொண்டர்கள் தயார்- அமைச்சர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra : Shiv Sena warns BJP | இது ஒன்றும் ஹரியானா இல்லை.. பாஜகவிற்கு சிவசேனா வார்னிங்!-வீடியோ

    மும்பை: கடைசி நேரத்தில் சிவசேனா கொடுக்கும் நெருக்கடியினால் கோபம் அடைந்த பாஜக தலைவர்களும் தொண்டர்களும் சட்டசபை தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்காமல் மீண்டும் போட்டியிட்டால் என்ன என்ற கேள்வி எழுப்புவதாக பாஜக அமைச்சர் ஜெய் குமார் ராவல் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளதால் இருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துவர் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சிவசேனாவோ தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின் போது பேசிய படி, 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல்வராகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜக முதல்வராகவும் இருக்க வேண்டும் என கோரியுள்ளது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    ஆனால் இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் மகாராஷ்டிரத்தில் இன்னும் ஆட்சி அமையாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

    பாஜக தொண்டர்கள்

    பாஜக தொண்டர்கள்

    இந்த நிலையில் இதுகுறித்து பாஜக அமைச்சர் ஜெய்குமார் ராவல் கூறுகையில் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டதற்கு பாஜக தொண்டர்கள் கோபமடைந்தனர்.

    தேவேந்திர பட்னவீஸ்

    தேவேந்திர பட்னவீஸ்

    ஆனால் பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது சிவசேனா கட்சி நம்மை பிளாக் மெயில் செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோரின் கடும் உழைப்புகளுடன் மக்கள் இருக்கிறார்கள்.

    பாஜக தொண்டர்கள்

    பாஜக தொண்டர்கள்

    எனவே நாம் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காமல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று தொண்டர்களும் பாஜக தலைவர்களும் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்றைய தினம் மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்கிறார், தேவேந்திர பட்னவீஸோ அமித்ஷாவை சந்திக்கிறார். என்சிபி தலைவர் சரத் பவாரோ சோனியா காந்தியை சந்திக்க டெல்லி விரைந்துள்ளார்.

    English summary
    BJP Minister Jaykumar Rawal says that his party ready to contest in election again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X