மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: பரபரக்கும் அரசியல் களம்.. ஆளுநருடன் பாஜக குழு சந்திப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    மும்பை : மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜகவினர் ஆளுநர் மாளிகையில் சந்தித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி இணைந்து பெரும்பான்மை பலத்தை பெற்ற நிலையிலும் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க சிவசேனா கேட்கிறது.

    BJP to meet Maharastra Governor today

    அதற்கு பாஜகவோ முடியாது என்கிறது. இதையடுத்து என்சிபி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா கனவு கண்டது. ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என சரத்பவாரிடம் சோனியா காந்தி நாசுக்காக கூறிவிட்டார்.

    இதையடுத்து என்சிபி கட்சித் தலைவர் சரத்பவாரை நேற்று சிவசேனாவின் தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார். அப்போது சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்றும் மாநிலத்தில் ஏற்படும் சட்ட நெருக்கடியை தாம் விரும்பவில்லை என்றும் பவார் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார்.

    "அல்லேலுயா.. துன்பமும் துயரமும்.." மெர்சியின் இறுதி சடங்கில் தந்தை பாடிய பாட்டு.. உருக்கமான தருணம்!

    நாளைக்குள் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் துணை முதல்வர் பதவி, 17 இலாகா என சிவசேனாவுக்கு தூண்டில் போட்டு காத்திருக்கிறது பாஜக. ஆனால் சிவசேனாவோ முதல்வர் நாற்காலி கிடைக்கும் வரை ஓய்வு இல்லை என கூறி போராடி வருகிறது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசுகிறார். மகாராஷ்டிரத்தில் அரசு உருவாகும் என்றால் அது பாஜக - சிவசேனா கூட்டணி அரசுதான் என பாஜகவினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP to meet Maharastra Governor Bhagat Singh Koshyari today to claim to form government in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X