மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கி வீசுங்கய்யா இந்த பொம்மைகள.. பெண்கள் உள்ளாடைக்கு விளம்பரம் செய்த கடைகள்.. பொங்கிய சிவ சேனா!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் உள்ள கடைகளில் பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்காக பொம்மைகள் வைக்கப்படுவதற்கு சிவ சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மும்பை மாநகரில் உள்ள துணிக்கடைகளில் பெண்களுக்கான உள்ளாடைளை விற்பனை செய்யும் கடைகள் அவற்றை விளம்பரப்படுத்தும் வகையில் கடைக்கு வெளியே மேனிக்யூன்ஸ் எனும் பொம்மைகளை வைத்துள்ளன.

உள்ளாடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அந்த பொம்மைகளுக்கு பெண்களின் உள்ளாடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சிவ சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உள்ளாடை விளம்பரம்

உள்ளாடை விளம்பரம்

பெண்களை சங்கடப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பொம்மைகளை நீக்க வேண்டும் என சிவ சேனா கட்சி சார்பில் மும்பை மாநகர சட்ட கமிட்டியிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த மாநகராட்சி சட்ட கமிட்டியின் தலைவர் ஷீட்டால் மஹேத்ரே, பெண்களின் உள்ளாடை விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ள பொம்மைகளை 15 நாட்களுக்குள் அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

உரிமங்கள் ரத்து செய்யப்படும்

உரிமங்கள் ரத்து செய்யப்படும்

மேலும் அங்கீகாரமற்ற கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மும்பை மாநகர சட்ட கமிட்டியின் தலைவர் மஹேத்ரே உத்தரவிட்டுள்ளார்.

6 ஆண்டுகளில் மீண்டும் புகார்

6 ஆண்டுகளில் மீண்டும் புகார்

இதுதொடர்பாக சட்ட கமிட்டி தலைவர் மஹேத்ரே மேலும் கூறியதாவது, இந்த மனு கடந்த 6 ஆண்டுகளில் சட்ட கமிட்டிக்கு முன்பு தற்போது மீண்டும் வந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக பொம்மைகளை வைத்திருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மும்பை மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை.

நடவடிக்கை எடுக்கவே இறங்கியுள்ளோம்

நடவடிக்கை எடுக்கவே இறங்கியுள்ளோம்

ஆனால் உள்ளாடையை விளம்பரப்படுத்துவதற்கு என்று முறை உள்ளது. அவற்றை தவறான முறையில் கையாள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் இறங்கியுள்ளோம்.

பெண்களுக்கு பெரும் சங்கடம்

பெண்களுக்கு பெரும் சங்கடம்

மேனிக்யூன்கள் உள்ளாடையுடன் மரக்கிளையில் தொங்கவிடப்படுகிறது. இதனை பார்க்கும் போது பெண்களுக்கு பெரும் சங்கடம் ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு உள்ளாடைகள் எங்கு கிடைக்கும் என தெரியும். அவற்றை விளம்பரப்படுத்த தேவையில்லை. உள்ளாடை விளம்பரப்படுத்த முறை உள்ளது. அவற்றிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மும்பை மாநகர சட்டக் கமிட்டியின் தலைவரான ஷீட்டல் மஹத்ரே தெரிவித்துள்ளார்.

கைவிரித்த நிர்வாகம்

கைவிரித்த நிர்வாகம்

2013ஆம் ஆண்டு சிவ சேனா கட்சி இதுபோன்ற உள்ளாடை விளம்பரத்திற்காக வைக்கப்படும் மேனிக்யூன்களை அகற்ற வேண்டும் என மாநகராட்சியிடம் மனு அளித்திருந்தது. ஆனால் அதற்கு உரிமையில்லை என மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Shiv Sena urges the Brihanmumbai Municipal Corporation to remove unauthorized mannequins that display women’s lingerie in Mumbai. BMC Law Committee ordered to remove unauthorized Lingerie mannequins within 15 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X