மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற "பிஎம்சி" டீம்.. கொரோனா வந்தது எப்படி?

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்களுக்கு செய்யப்பட கொரோனா சோதனையில், கொரோனா உறுதியானது.

இதையடுத்து இவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் நேற்று இரவில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்

அமிதாப் வீடு

அமிதாப் வீடு

இந்த நிலையில் அமிதாப் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் மனைவி எம்பி ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு, அவரின் குழந்தைக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.

யாருக்கும் இல்லை

யாருக்கும் இல்லை

தற்போது அமிதாப் பச்சன் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர் கொரோனா அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளார். இதனால் அவர் பெரிய அளவில் கஷ்டங்கள் எதையும் அனுபவிக்கவில்லை. இயல்பாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் பாதிக்காமல் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீட்டில் சோதனை

வீட்டில் சோதனை

இதையடுத்து அமிதாப்பின் மும்பை வீட்டில் இன்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அவர்களின் வீட்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது . இதற்காக மும்பை மெட்ரோ கார்பரேஷனின் பிஎம்சி குழு அங்கே சென்றுள்ளது. அந்த வீட்டில் பணியாற்றும் நபர்களின் மாதிரிகளை அவர்கள் எடுத்து உள்ளனர். இவர்களையும் சோதனை செய்ய முடிவு எடுத்து உள்ளனர்.

எப்படி வந்தது

எப்படி வந்தது

அதோடு பிஎம்சி ஊழியர்கள் இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று விசாரித்து வருகிறார்கள். அங்கு பணியாற்றும் நபர்கள் மூலம் கொரோனா வந்ததா என்று விசாரிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிரமாக காண்டாக்ட் டிரேசிங் நடந்து வருகிறது .

English summary
BMC reaches to Jalsa Home after Amitabh Bachchan and Abhishek gets Coronavirus yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X