மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டை துண்டாட வேண்டாம்.. கமலுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

மும்பை: நாட்டை துண்டாடதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றார்.

Bolywood Actor Vivek Oberoi condemns actor Kamalhassan

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா உள்ளிட்டோர் கமலை கடுமையாக விமர்சித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

கோட்சே விவகாரம்: கமலை எதிர்த்து வலது சாரிகள்.. மவுனிகளாக முற்போக்குகள்! கோட்சே விவகாரம்: கமலை எதிர்த்து வலது சாரிகள்.. மவுனிகளாக முற்போக்குகள்!

இந்நிலையில் இந்தி நடிகர் விவேக் ஓபராயும் நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தயவுசெய்து சார், மிகச்சிறிய ஒரு கலைஞரிடமிருந்து ஒரு பெரிய கலைஞருக்கு, இந்த நாட்டை பிரிக்க வேண்டாம், நாம் அனைவரும் ஒன்று தான்.

டியர் கமல் சார், நீங்கள் ஒரு பெரிய கலைஞர். எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது. கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறியிருக்கலாம், ஏன் அவர் ஒரு இந்து என குறிப்பிட்டீர்கள்? இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்காக இவ்வாறு பேசியுள்ளீரா ? இவ்வாறு விவேக் ஓபராய் கூறியுள்ளார்.

நடிகர் விவேக் ஓபராய் பிஎம் மோடி என்ற திரைப்படத்தில் மோடி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் கமல் இன்று மேற்கொள்ள இருந்த இரண்டாவது நாள் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

English summary
Bolywood Actor Vivek Oberoi condemns actor Kamalhassan for his speech on Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X