மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நுகர்வோருக்கு சலுகை.. பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு.. 'பட்ஜெட் 2020' எப்படி இருக்கும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டில் கவனிக்கபட முக்கியமாக வேண்டிய விஷயங்கள் என்ன | Budget 2020: key things to watch for

    மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் நுகர்வேரை ஊக்குவிக்க பல வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். இதனால் பல பொருட்களின் விலை குறையும் என்கிறார்கள்.

    பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட் பிரபல தனியார் ப்ரோக்ரேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் பட்ஜெட்டில் நுகர்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டில் பல பொருட்களுக்கு சலுகை தந்து குறுகிய கால சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறினால், பொருளாதாரம் மிகவும் அகல பாதளத்திற்கு சென்றுவிடும் நிலையில் உள்ளது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பையே அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளிவிடும்.

    வாங்கும் சக்தி

    வாங்கும் சக்தி

    நாட்டில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 5 சதவீதமாக தொடர்கிறது. எனவே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க குறுகிய கால நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொருளாதார தேவையை அதிகரிக்கவும் மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்தவும் அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிட வாய்ப்ப உள்ளது.

    வரி சீர்திருத்தம்

    வரி சீர்திருத்தம்

    மக்களின் வருவாயை பெருக்க அரசு இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நிறுவனங்களுக்கான வரி சீர்திருத்தம், இன்னொன்று தனிநபர் வருமான வரி சீர்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. தற்போது பொருளதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி உள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதியை அரசு முதலீடு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.

    வாங்கும் திறன்

    வாங்கும் திறன்

    இப்படி செய்தால் வேலை வாய்ப்பு பெருகும். இதன் மூலம் மக்களின் வருமானம் உயர்ந்து அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். தனிநபர் வருமான வரியில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. நடுத்தர வருமானம் மற்றும் நடுத்தர மாத ஊதியம் பெறுவோருககு சலுகை அறிவிக்கப்படலாம். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரித்து அவர்களின் வாங்கு சக்தி வலுப்பெறும். இதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    வரி வருவாய்

    வரி வருவாய்

    அரசின் வரி வருவாய் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக குறைந்துள்ளது. அதேசமயம் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. வங்கிகள் வாராக்கடன் பிரச்சனையால் தொழில்துறைக்கும் நுகர்வோருக்கும் கடன் தரமுடியாமல் திணறி வருகின்றன. இதனால் என்னதான் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவித்தாலும் மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

    தொழில்துறை நம்பிக்கை

    தொழில்துறை நம்பிக்கை

    இப்படி ஒரு மோசமான சிக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று தொழில்துறையினர் பெரும் நம்பிக்கையில் உள்ளனர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    budget 2020 expectations: consumer may get Offer, many goods prices may down, income tax reduction may possible
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X