மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனிதான் காஷ்மீர் சொர்க்கமாகும்.. தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.. இந்திய தொழில் அதிபர்கள் வரவேற்பு

Google Oneindia Tamil News

மும்பை: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு இந்திய தொழில்அதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகள் ஏற்படும் வழிகள் உருவாகி இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது பிரிவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் இனி இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம். மேலும் மற்ற மாநிலங்களைப் போலவே காஷ்மீரிலும் இந்திய சட்டங்கள் அனைத்தும் செல்லுபடியாகும்.

இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி ஜம்மு காஷ்மீரில் குடியேறி வீடு நிலம் வாங்கி நிரந்தரமாக வசிக்க முடியும். இதேபோல் அந்த மக்களுக்கு நாட்டில் உள்ள கட்டாயக கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் கல்வி கிடைக்கும்,

ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இப்ப எப்படி இருக்கு... போலீஸ் வெளியிட்ட சூப்பர் தகவல் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இப்ப எப்படி இருக்கு... போலீஸ் வெளியிட்ட சூப்பர் தகவல்

அரவணைக்கும் நேரம்

அரவணைக்கும் நேரம்

மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு இந்திய தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு- காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கை ஏன் இத்தனை காலமாக எடுக்கப்படாமல் இருந்தது என்றும், தேசிய சமுதாயத்தில் காஷ்மீரிக்களை அனைவரும் அரவணைக்கும் நேரம் வந்திருப்பதாகவும் கூறினார்.

வளர்ச்சிக்கு அடித்தளம்

வளர்ச்சிக்கு அடித்தளம்

அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு இன்று சந்திக்கும் நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்றும் ஜம்மு- காஷ்மீரின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமிடுபவை என்றும் கூறியுள்ளார்.

நீண்ட கால விருப்பம்

நீண்ட கால விருப்பம்

தேர்தல் வாக்குறுதியை பாரதிய ஜனதா நிறைவேற்றி உள்ளதால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நீண்டகால விருப்பம் என ஜேஎஸ்டபிள்யூ குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறியுள்ளார்.

அதிக முதலீடு

அதிக முதலீடு

மத்திய அரசின் முடிவால் ஜம்மு- காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவர் ராஜிவ் தல்வார் கூறியுள்ளார்.

காஷ்மீர் இனி சொர்க்கம்

காஷ்மீர் இனி சொர்க்கம்

ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் துலிப் மலர்த் தோட்டம் உள்பட 2 அழகிய தொழிற்சாலைகள் இருந்தன. ஆனால் அவை தீவிரவாதத்தால் மூட நேரிட்டது.. இப்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீரில் முதலீடுகள் திரும்பும். இனி தான் உண்மையான சொர்க்கமாக காஷ்மீர் திகழும் என்று கூறியுள்ளார்.

English summary
business peoples welcomes center govt decision of cancel jammu kashmir special status, they says Investments return in kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X