மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்.. ஆர்எஸ்எஸ்-ஸின் அவதூறு வழக்கு.. நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

Google Oneindia Tamil News

மும்பை: ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இருவரும் இன்று ஆஜராகினர்.

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-விற்கு தொடர்பு இருக்கிறது என்று ராகுல் காந்தி அவதூறு பேசியதாக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகியுள்ளாா்.

Case of defamation by RSS.. Rahul Gandhi to appear in Mumbai court

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் எழுத்தாளரான கவுரி லங்கேஷ் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பாஜக மற்று் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது.

இரு இயக்கங்களின் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்கள் துன்புறுத்தல், தாக்குதல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். உச்சகட்டமாக படுகாலை செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் மதவாத சக்திகளுக்கு எதிராக போரடிய கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் நம் நாட்டில் நிகழ மீண்டும் அனுமதிக்க கூடாது என தெரிவித்திருந்தார்.

கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி கருத்து தெரிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்களை குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த ஹிருத்மான் ஜோஷி என்பவர், மும்பை மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் யெச்சூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்துள்ள இவ்வழக்கிற்காக மும்பை வந்த ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

English summary
Congress leader Rahul Gandhi and Marxist Communist Party leader Sitaram Yechury appeared in the Mumbai court today in connection with the defamation case of the RSS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X