மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கியமான ஆராய்ச்சிக்காக வந்திருக்கேன் படிக்க விடுங்க.. மும்பை ஐஐடி வகுப்பறைக்குள் புகுந்த மாடு

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பை ஐஐடி வகுப்பறைக்குள் புகுந்த மாடு.. மாணவர்கள் அதிர்ச்சி-வீடியோ

    மும்பை: மும்பை ஐஐடியில் சீரியஸாக ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த போது வகுப்பறைக்குள் மாடு புகுந்ததால் அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளியில் படிக்காத மாணவர்களை நம்மூர் ஆசியர்கள் நீயெல்லாம் மாடு மேய்க்க போ.. அதற்கு தான் நீ லாயக்கு என்று அடிக்கடி கூறுவார்கள். இதனால் கோபம் கொண்ட ஒரு மாடுதானா என்னவோ தெரியவில்லை.. மும்பை ஐஐடிக்கே சென்று படிக்க போய் இருக்கிறது.

    cattle strays inside IIT Bombay classroom when a lecture is in session

    மும்பை ஐஐடியில் ஒரு வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் சீரியஸாக கிளாஸ் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது உன்னிப்பாக அவரை கவனித்தபடி மாடு உள்ளே புகுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் மாட்டை வட்டு ஒதுங்கி செல்கிறார்.

    பின்னர் வகுப்பறைக்குள்ளேயே சுற்றி சுற்றி மாடு வந்தது. ஆனால் அங்கிருந்து வெளியேற மறுத்தது. ஆனால் அந்த மாட்டை மாணவர்கள் வெளியேற்றினர். இது தொடர்பாக மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    பசு மாடு கேஸ் வெளியிட்டால் அது ஆக்ஸிஜனாகத்தான் வரும் என்று அண்மையில் உத்தரகாண்ட் "விஞ்ஞானி" ஒருவர் கூறியிருந்தார். ஒரு வேளை அது தொடர்பான ஆய்வுக்காக பசுமாடு வந்திருக்கலாம் என இணையத்தில் கிண்டல்கள் எழுந்துள்ளது,

    இதனிடையே மும்பை ஐஐடிக்குள் மாடுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டதாக அங்கு படிக்கும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஜூலை 11ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவரை இரண்டு மாடுகள் தாக்கி காயமடைந்தார்.

    உலகின் தலை சிறந்த கல்விநிறுவனங்களில் ஒன்றா மும்பை ஐஐடி வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக மாடுகள் சுற்றித்திரிவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக மாணவர்கள் தங்கியுள்ள ஹாஸ்டல் பகுதிக்குள் மாடுகள் அதிகமாக சுற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

    English summary
    cattle strays inside IIT Bombay classroom when a lecture is in session. The animal can be seen walking across the room.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X