மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யெஸ் வங்கி முறைகேடு.. டிஹெச்எப்எல் நிறுவனம், ராணாவின் நிறுவனங்கள உள்பட 7 இடங்களில் சிபிஐ ரெய்டு

Google Oneindia Tamil News

மும்பை: டிஹெச்எப்எல் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராணா கபூர் கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக திவான் ஹவுசிங் நிதி நிறுவனம் (டிஹெச்எப்எல்) மற்றும் யெஸ் வங்கி நிறுவனர் ராணாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என ஏழு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    யெஸ் வங்கி நிதி நெருக்கடி விவாகரத்தில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் பல முறைகேடுகளை அரங்கேற்றி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

    CBI raids DHFL , YES Bank founder Rana Kapoors companys

    திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ .3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை யெஸ் வங்கி வாங்கியதுடன். இதற்கு பிரதிபலனாக ராணா கபூரின் மூன்று மகள்களில் ஒருவரான ரோஷ்னி கபூருக்கு சொந்தமான டொயிட் என்ற நிறுவனத்திற்கு ரூ .600 கோடியை திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கடனை வழங்கியது என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    அத்துடன் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அதற்கு கடன் கொடுத்து சட்டவிரோதமாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா பணத்தை முதலீடு செய்ததாகவும், ராணா கபூர் 2000 கோடி ரூபாயை லண்டனில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. ராணாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்

    CBI raids DHFL , YES Bank founder Rana Kapoors companys

    இந்நிலையில் யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று ஏழு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். திவான் ஹவுசிங் நிதி நிறுவனம்,.திவான் ஹவுசிச்ங்க நிதி நிறுவன தலைவர் கிபிர் வாகவானுக்கு சொந்தமான இடங்கள், மற்றும் ராணா குடும்பத்துடன் தொடர்புடைய டாயிட்அர்பன் வென்ச்சர்ஸ் நிறுவனம் உள்பட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    CBI raids DHFL , YES Bank founder Rana Kapoors companys

    முன்னதா கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் நிதி நெருக்கடிக்கு காரணமாக முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார். அன்றே மும்பையில் உள்ள யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பிறகு சனிக்கிழமை அதிகாலை அவரை கைது செய்தது. சுமார் 4500 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணாவை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

    English summary
    CBI raids DHFL , YES Bank founder Rana Kapoor's companys Over Yes bank crises
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X