மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல தாதா சோட்டா ராஜனின் சகோதரர் பாஜக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டி!

Google Oneindia Tamil News

மும்பை: பிரபல தாதா சோட்டா ராஜனின் சகோதரர் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர மாநில தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு அறிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சமூக நீதித் துறை அமைச்சராக உள்ளவர் ராம்தாஸ் அதாவ்லே. இவர் இந்திய குடியரசு கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

சீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் இருந்து 13 டன் தங்கம்.. ரூ. 233 கோடி பறிமுதல்சீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் இருந்து 13 டன் தங்கம்.. ரூ. 233 கோடி பறிமுதல்

அதாவ்லே

அதாவ்லே

இவர் பாஜகவுடன் இணைந்து நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலை சந்தித்து வருகிறார். தற்போது மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடும் அதாவ்லே கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 இந்திய குடியரசு கட்சி

இந்திய குடியரசு கட்சி

அவை பாஃல்டானில் உள்ள சடாரா, சோலாபூரில் உள்ள மால்ஷிராஸ், பந்தாரா, நாந்தெத்தில் உள்ள நைகான், பர்பாணியில் உள்ள பத்ரி, மும்பையில் உள்ள மன்குர்த்- சிவாஜி நகர் ஆகிய 6 தொகுதிகளாகும்.

சோட்டா ராஜன்

சோட்டா ராஜன்

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் அதாவ்லே கட்சி வெளியிட்டது. அதில் பாஃல்டான் தொகுதியில் தீபக் நிக்கல்ஜே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தாதா சோட்டா ராஜனின் சகோதரர் ஆவார். மேலும் நிக்கல்ஜே போட்டியிடும் தொகுதிதான் சோட்டா ராஜனின் பிறந்த ஊராகும்.

பாஃல்டான்

பாஃல்டான்

நிக்கல்ஜே கடந்த முறை செம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதி பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிக்கல்ஜே, பாஃல்டானில் நிறுத்தப்படுகிறார்.

நிக்கல்ஜே

நிக்கல்ஜே

கடந்த 2018-ஆம் ஆண்டு 22 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக நிக்கல்ஜே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் செம்பூரில் சித்தார்த் காலனியில் வசிக்கும் அந்த பெண் தன்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக நிக்கல்ஜே மீது நேற்று புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chhota Rajan's brother contest in Phaltan assembly seat from Maharashtra which is Chhota Rajan's native place. He has got ticket from Republican Party of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X